Kuwait News
Kuwait News/block-2
குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்
Image : மரணமடைந்த பக்ருதீன்
குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.
இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Death | Tamil Worker | Kuwait Workers
குவைத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்
Image : மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்ட காட்சி
குவைத்தில் டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை குழந்தை பெற்றெடுத்தார். சால்மியா பிளாக் 10-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குறிப்பிட்ட பெண்ணுக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவரது கணவர், குவைத்தில் இயங்கி வருகின்ற "யாத்திரா டாக்ஸி" குழுவை சேர்ந்த மனோஜ் என்பவருடைய டாக்ஸியை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்தார். இதை அறிந்த அவர் இளம்பெண்ணை சபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன், அவர்களுக்கு பிரசவ அறிகுறிகள் தெரிந்தன. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர், கணவரின் உதவியுடன் வாகனத்தின் பின் இருக்கையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
தொடந்து ஐந்தாவது ரிங் ரோடு வழியாக மருத்துவமனைக்கு கடந்து செல்லும் போது, அந்த இளம் பெண் மன்னரின் பயான் அரண்மனை அருகில் வைத்து டாக்ஸியிலேயே பிரசவித்தார். பின்னர் உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை மகப்பேறு வார்டுக்கு மாற்றி,மேலும் சிகிச்சை அளித்தனர். குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Hospital | Tamil Worker | Kuwait Workers
குவைத்தில் போலி முகவரி உருவாக்கி வசிக்கின்ற எத்தனை பேர் சிக்க போறாங்களோ தெரியலியே கடவுளே.....
Image : கைது செய்யப்பட்ட நபர்கள்
குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர். அரசின் குற்றப் புலனாய்வுத்துறை, சிவில் தகவல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், முகவரிகள் பெற இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களும் மற்றும் அவர்களுக்கு பணம் கொடுத்து போலியாக முகவரிகள் பெற காத்திருந்த 7 நபர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு கும்பலை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்தியில் சிக்கிய ஊழியர் தனது அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி சிவில் தகவல் ஆணையத்தின் அரசு இணையதள மின்னணு அமைப்பில் நுழைந்து முகவரி பெறவேண்டிய வெளிநாட்டினரான நபர்கள் நேரில் ஆஜராகாமல், சட்டபடி தேவையான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கவோ செய்யாமல் போலியான முகவரிகளை உருவாக்கிய குற்றத்தைச் செய்து வந்துள்ளார்.
ஒவ்வொரு போலியான வசிப்பு முகவரிக்கும் 120 தினார் வரை கட்டணமாக(லஞ்சமாக) வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குவைத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக பல முகவர்களுடன் இணைந்து இதுபோன்ற 5,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போலியான முகவரிகளை அவர் உருவாக்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டார். பிடிபட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக் குழு இரண்டு தரகர்களையும், போலியான முகவரி பெற அவர்களுக்கு பணம் கொடுத்த ஏழு நபர்களையும் கைது செய்தனர்.
குற்றவாளியான ஊழியர் இப்படி கிடைத்த பணத்தை கொண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக அரசின் பொது வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் குற்றவாளிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டன. இவனிடம் போலியாக முகவரி ரெடி பண்ணின எத்தனை பேர் இவன் வாக்குமூலம் அடிப்படையில் சிக்க போறாங்களோ தெரியலியே.... பிடிபட்ட நபர்கள் குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை...போலியாக முகவரியில் யாராவது வசித்து வந்தால் எதுக்கும் இந்த புகைப்படத்தை சற்று உற்று நோக்குவது நல்லது
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Police | Fake Address | Kuwait Workers
குவைத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 தீ விபத்துகள் ஒருவர் மரணமடைந்தார் 9 பேர் வரையில் காயமடைந்தனர்
Image:தீ விபத்தின் புகைப்படம்
குவைத்தில் உள்ள அல்-குரைன் சந்தையின் முதல் மாடியில் உள்ள ஒரு உணவகத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்தனர். அல்-பைராக் மற்றும் அல்-குரைன் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக பொது தீயணைப்புப் படை அறிவித்தது.
Image: தீ விபத்தின் புகைப்படம்
அதேபோல் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஃபர்வானியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதை ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் வரையில் காயமடைந்தனர்.
Image: தீ விபத்தின் புகைப்படம்
மேலும் அதே ஃபர்வானியா பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று(02/07/25) புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த மூன்று தீ விபத்துகள் தொடர்பாகவும் விசாரனை தொடங்கியுள்ளது.
Image: தீ விபத்தின் புகைப்படம்
அதேநேரம் குவைத்தில் உண்மையான கோடைக்காலம் இன்று(03/07/25) வியாழக்கிழமை தொடங்கும் என்றும் அல்-உஜைரி அறிவியல் ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான வெயில் அடுத்த 13 நாட்களுக்கு நீடிக்கும் இந்த நாட்களில் வானிலை வளிமண்டல வெப்பநிலை தற்போதைய வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்.
Image: தீ விபத்தின் புகைப்படம்
மேலும் இந்த நாட்களில் நாடு கடுமையான வறட்சி மற்றும் வெப்பக்காற்றை அனுபவிக்கும் என்றும், சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் இந்தப் பருவம் "அல்-ஹக்கா" என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடுமையான கோடை காலத்தில் தீ விபத்துக்கு வாய்புகள் அதிகம், எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Image: தீ விபத்தின் புகைப்படம்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Police | Fire Accident | Kuwait Workers
குவைத்தின் அல் வஃப்ரா சாலையில் கார் மற்றும் தண்ணீர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
Image : வஃப்ரா சாலை விபத்து
குவைத்தின் Arifjan பகுதியை சேர்ந்த தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று(02/07/25) மாலையில் அல் வஃப்ரா சாலையில் தண்ணீர் லாரியின் பின்புறத்தில் கார் ஒன்று வந்து பயங்கரமாக மோதிய விபத்தில் காரில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த இருவருடைய உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் குறித்த கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. விபத்து ஏற்பட்ட சூழ்நிலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன.
Image : ஃபர்வானியா குடியிருப்பு தீ விபத்து
அதேபோல் நேற்று இரவு Farwaniya பகுதியிலுள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று Farwaniya மற்றும் Subhan தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Police | Road Accident | Car Accident
ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
Image credit:ONA
ஒமானின் அல் தகிலியா கவர்னரேட்டில் இன்று(02/07/25) புதன்கிழமை காலையில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 18 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பேருந்தில் இருந்த மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது ஒமானின் நிஸ்வா மற்றும் இஸ்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்கியின் அல் ருசைஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு சாலையின் ஓரத்தில் உள்ள திட்டில் மோதியதாக ராயல் ஒமான் காவல்துறை வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த துயரமான விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Oman Police | Road Accident | Bus Accident
குவைத்தின் சிறந்த அதிகாரியும் இந்திய சமூகத்தினருடன் நெருக்கம் பேணிவந்த நபருமான காலித் அல்-ஜரல்லா காலமானார்
Image : காலித் அல்-ஜரல்லா அவர்கள்
குவைத்தின் சிறந்த அதிகாரியும் மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சருமான காலித் அல்-ஜரல்லா(வயது-78) அவர்கள் இரவு காலமானார். அவர் 1971 ஆம் ஆண்டு குவைத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தில் வேலைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் பல்வேறு வெளியுறவுத்துறை பதவிகளை வகித்ததை தொடந்து, 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சர் ஆவதற்கு முன்னதாக 1972 முதல் 1974 வரை லெபனானுக்கான குவைத்தின் தூதராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் குவைத்துக்குத் திரும்பிய பிறகு, வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் 1974 முதல் 1987 வரை அரபு விவகாரப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1987 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் விவகாரங்களுக்கான துறையின் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
1999 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 2021 இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்துடனும், இந்திய தூதரகத்துடனும் அவர் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த சிறந்த நபர் என்பது அமைப்புகளில் இயங்கி வருகின்ற இந்தியர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Foreign Minister | Indian Community | Kuwait Minister
Till now, we were covering news and updates from Kuwait, from now on we are widening our area to all over the GCC. This new modification has been made to covering all GCC news under one domain arabtamildaily.com. We continue to look forward to the support we have received so far from our readers. Also follow us on Linktree
To advertise with us contact on "+919486443352" or drop an email to "editoratdnews@gmail.com"