வளைகுடாவில் வேலைக்கு வந்துள்ள ஒவ்வொரு நபரின் கனவும் வளைகுடா வாழ்க்கையை முடித்து மகிழ்ச்சியாக நிரந்தரமாக குடும்பத்துடன் தன்னுடைய தாய்நாட்டில்,பிறந்த வளர்ந்த ஊரில் வாழ்வதே....நீங்கள் அலாரம் வைக்காமல் படுக்கைக்குச் செல்லலாம், இதமான காலைப்பொழுதில், கயலிகட்டி,உதிக்கும் சூரியனை பார்க்கும் டீ குடிக்கும் அனுபவமே வேறு..... 3 வேளை உணவு..... மகிழ்ச்சியாக தருணங்கள் என்று கனவு காணாத வெளிநாட்டவர் யாரும் இருக்க மாட்டார். ஆனால் ஏக்கம் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. ஏக்கத்துடன் வீடு போகும் பேருபானலா வெளிநாட்டினர் வாழ்கையில்..... சிறிது நாட்கள் தாண்டும்போது வெறும் ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.....எனவே வெளிநாட்டு வாழ்க்கைக்கு Goodbye சொல்லி வீட்டிற்குச் செல்லவிருக்கும் ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.......
1: தனது சொந்த நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவர் வேறொரு நாட்டில் வேரூன்ற(வெற்றியடைய) வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வாழ்கையில் பெரும்பாலான மக்கள் வேரூன்றியுள்ளனர்(வெற்றி கண்டுள்ளனர்). ஆனால் நீண்ட காலமாக வெளிநாட்டில் இருந்த ஒரு நபருக்கு, தனது தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்று அங்கு வேரூன்றுவது(வெற்றியடைவது) மிகவும் கடினம்.
2: வளைகுடாவில் வணிகத்திற்கும்(தொழிலுக்கும்) நாட்டில் உள்ள வணிகத்திற்கும்(தொழிலுக்கும்) பெரிய வித்தியாசம் உள்ளது. தாய்நாட்டில் நீங்க பெற்ற அனுபவம் பெரும்பாலும் வளைகுடா நாட்டில் உங்கள் வெற்றிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் வளைகுடாவில் நீங்கள் பெற்ற அனுபவம் தாய்நாட்டில் அவ்வளவு சிறப்பாக பலன்தாரது.
3: வளைகுடாவில் வெளிநாட்டவராத நீங்கள் வாழ்க்கையினை தொடங்கும்போது உங்கள் இதயத்தில் இருந்த பயமும்,தயக்கமும், ஆவேசமும் இது எதுவும் தாயகத்தில் பலன்தராது. நாட்டில் எந்தவொரு திட்டத்தையும் தைரியத்துடன் தொடங்கப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால்தான் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும் ஒரு வெளிநாட்டவர் ஒருபோதும் நாட்டில் வெற்றியடைவதில்லை. இளமை,வலிமை அனைத்தையும் இழந்த பிறகே பெரும்பாலான நபர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்பதும் ஒரு காரணம்......
4: பொருள்,ஆதாயம் இவை உங்களிடம் இருந்தால் மட்டுமே உறவுகள் உடன் இருக்கம், அது நட்பு அல்லது குடும்ப உறவுகள் யாராக இருந்தாலும் சரி. நம்மிடம் சேமிப்பு இருந்தால் மட்டும், நம் அவர்களுக்கு தேவையான அளாக கருதுவார்கள்.
5: நாம் நம்முடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். ஆனால் உங்களை நீங்கள் மறந்துவிட வேண்டாம், நாம் செய்ய வேண்டியது எல்லாம் நம்முடைய எதிர்காலத்துக்காக ஒரு சிறிய சேமிப்பை ஒதுக்குவதுதான்.
6: கடினமான காலங்களில் யாரும் நமக்கு உதவி செய்யமாட்டார்கள்,அந்த நேரத்தில் நாம் உதவியவர்களிடமிருந்து வேதனையான, கசப்பான கடினமான அனுபவங்களை மட்டுமே சந்திக்க வேண்டியது இருக்கும்
7: உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அது கரைந்துவிட அதிக நேரம் தேவையில்லை. வருவாய் இல்லாமல் செலவு செய்யும்போது, நாம் பாட்டிலில் உள்ள குச்சியைப் போல இருப்போம்(கண் மை குப்பி),மிகக் குறைவாக செலவு செய்தாலும் மெதுவாக பாட்டில் காலியாகும்,இறுதியில் பாட்டிலும், குச்சி மட்டுமே எஞ்சியிருக்கும். இருக்கின்ற ஒன்னை விட்டுவிட்டால் அதை திரும்பப் பெறுவது மிகவும் கடினம், எனவே உங்களிடம் உள்ளதை விட்டுக்கொடுப்பதற்கு முன் நூறுமுறை சிந்தியுங்கள்.
8: இதனால் சிறிது காலத்தில் நம்முடைய காலியான பாக்கெட் மற்றவர்கள் பார்வையில், நாம் வெறுக்கத்தக்கதாகவும்,தகுதியற்றதாகவும் ஆக்கும். மேலும் எந்த ஐடியாவும் இல்லாத முட்டாள்,தொந்தரவு செய்யும் நபர் இப்படி பட்டியல் நீளும்.....
9: வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து வீட்டிற்குச் செல்லும் தொண்ணூறு சதவீதம் பேர் திரும்பிச் வளைகுடா செல்ல வழி இருக்கிறதா என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டில் மதிப்பு இல்லை, நண்பர்களும் இல்லை, கையில் பணமும் இல்லை என்பதால், நம்முடைய குடும்பத்தில்
இருப்பவர்களிடம் மனதில்கூட தேவையில்லாத நபராக மாறும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.
10: நீங்கள் வளைகுடாவில் இருக்கும்போது, உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த அன்பையும் மரியாதையையும்,வளைகுடாவை விட்டு சென்றால் பெறுகிறீர்களா? நீங்கள் வளைகுடாவில் இருந்து விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும்போது தெரிந்த நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை கேட்டு, வளைகுடா வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து வீட்டிற்குச் செல்ல வேண்டாம். நல்ல காலங்களில் எதிர்காலத்திற்கு ஏதேனும் வருமானம் சேர்த்து வையுங்கள். உங்களுக்கு ஏதாவது செய்ய தைரியமும் விருப்பமும் இருந்தால் அல்லது ஒரு நிரந்தரமாக வருமானம் இருந்தால் நீங்கள் தைரியத்துடன் தாயகம் திரும்பலாம், உங்களுக்கு நாற்பது வயது ஆவதற்கு முன்பே செல்லுங்கள். வளைகுடாவை விட்டு வெளியேறுபவர்களை உதாசீனப்படுத்தும் பதிவல்ல இது. சில எச்சரிக்கைகள், நிதர்சனமான உண்மைகள் சொல்லும்போது,கேட்கும்போதும் கசப்பாக தெரியலாம்.... ஆனால் இதுதான் உண்மை.......
Gulf Life |
Real Story |
Tamil Article
Add your comments to Article