BREAKING NEWS
latest

Tamil Article - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Tamil Article செய்திகள், கட்டுரைகள், Tamil Article புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, January 7, 2021

வளைகுடா வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து நிரந்தரமாக தாயகம் திரும்ப முடிவு செய்த நபரா நீங்கள் ?? அப்படி என்றால் இதைப் படியுங்கள்......



வளைகுடாவில் வேலைக்கு வந்துள்ள ஒவ்வொரு நபரின் கனவும் வளைகுடா வாழ்க்கையை முடித்து மகிழ்ச்சியாக நிரந்தரமாக குடும்பத்துடன் தன்னுடைய தாய்நாட்டில்,பிறந்த வளர்ந்த ஊரில் வாழ்வதே....நீங்கள் அலாரம் வைக்காமல் படுக்கைக்குச் செல்லலாம், இதமான காலைப்பொழுதில், கயலிகட்டி,உதிக்கும் சூரியனை பார்க்கும் டீ குடிக்கும் அனுபவமே வேறு..... 3 வேளை உணவு..... மகிழ்ச்சியாக தருணங்கள்  என்று கனவு காணாத வெளிநாட்டவர் யாரும் இருக்க மாட்டார். ஆனால் ஏக்கம் அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. ஏக்கத்துடன் வீடு போகும் பேருபானலா வெளிநாட்டினர் வாழ்கையில்..... சிறிது நாட்கள் தாண்டும்போது வெறும் ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.....எனவே வெளிநாட்டு வாழ்க்கைக்கு Goodbye சொல்லி வீட்டிற்குச் செல்லவிருக்கும் ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.......

1: தனது சொந்த நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவர் வேறொரு நாட்டில் வேரூன்ற(வெற்றியடைய) வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வாழ்கையில் பெரும்பாலான மக்கள் வேரூன்றியுள்ளனர்(வெற்றி கண்டுள்ளனர்). ஆனால் நீண்ட காலமாக வெளிநாட்டில் இருந்த ஒரு நபருக்கு, தனது தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்று அங்கு வேரூன்றுவது(வெற்றியடைவது) மிகவும் கடினம்.

2: வளைகுடாவில் வணிகத்திற்கும்(தொழிலுக்கும்) நாட்டில் உள்ள வணிகத்திற்கும்(தொழிலுக்கும்) பெரிய வித்தியாசம் உள்ளது. தாய்நாட்டில் நீங்க பெற்ற அனுபவம் பெரும்பாலும் வளைகுடா நாட்டில் உங்கள் வெற்றிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் வளைகுடாவில் நீங்கள் பெற்ற அனுபவம் தாய்நாட்டில் அவ்வளவு சிறப்பாக பலன்தாரது.

3: வளைகுடாவில் வெளிநாட்டவராத நீங்கள் வாழ்க்கையினை தொடங்கும்போது உங்கள் இதயத்தில் இருந்த பயமும்,தயக்கமும், ஆவேசமும் இது எதுவும் தாயகத்தில் பலன்தராது. நாட்டில் எந்தவொரு திட்டத்தையும் தைரியத்துடன் தொடங்கப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால்தான் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும் ஒரு வெளிநாட்டவர் ஒருபோதும் நாட்டில் வெற்றியடைவதில்லை. இளமை,வலிமை அனைத்தையும் இழந்த பிறகே பெரும்பாலான நபர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்பதும் ஒரு காரணம்......

4: பொருள்,ஆதாயம் இவை உங்களிடம் இருந்தால் மட்டுமே உறவுகள் உடன் இருக்கம், அது நட்பு அல்லது குடும்ப உறவுகள் யாராக இருந்தாலும் சரி. நம்மிடம் சேமிப்பு இருந்தால் மட்டும், நம் அவர்களுக்கு தேவையான அளாக கருதுவார்கள்.

5: நாம் நம்முடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். ஆனால் உங்களை நீங்கள் மறந்துவிட வேண்டாம், நாம் செய்ய வேண்டியது எல்லாம் நம்முடைய எதிர்காலத்துக்காக ஒரு சிறிய சேமிப்பை ஒதுக்குவதுதான்.

6: கடினமான காலங்களில் யாரும் நமக்கு உதவி செய்யமாட்டார்கள்,அந்த நேரத்தில் நாம்  உதவியவர்களிடமிருந்து வேதனையான, கசப்பான கடினமான அனுபவங்களை மட்டுமே சந்திக்க வேண்டியது இருக்கும்

7: உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அது கரைந்துவிட அதிக நேரம் தேவையில்லை. வருவாய் இல்லாமல் செலவு செய்யும்போது, நாம் பாட்டிலில் உள்ள குச்சியைப் போல இருப்போம்(கண் மை குப்பி),மிகக் குறைவாக செலவு செய்தாலும் மெதுவாக பாட்டில் காலியாகும்,இறுதியில் பாட்டிலும், குச்சி மட்டுமே எஞ்சியிருக்கும். இருக்கின்ற ஒன்னை விட்டுவிட்டால் அதை திரும்பப் பெறுவது மிகவும் கடினம், எனவே உங்களிடம் உள்ளதை விட்டுக்கொடுப்பதற்கு முன் நூறுமுறை சிந்தியுங்கள்.

8: இதனால் சிறிது காலத்தில் நம்முடைய காலியான பாக்கெட் மற்றவர்கள் பார்வையில், நாம் வெறுக்கத்தக்கதாகவும்,தகுதியற்றதாகவும் ஆக்கும். மேலும் எந்த ஐடியாவும் இல்லாத முட்டாள்,தொந்தரவு செய்யும் நபர் இப்படி பட்டியல் நீளும்.....

9: வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து வீட்டிற்குச் செல்லும் தொண்ணூறு சதவீதம் பேர் திரும்பிச் வளைகுடா செல்ல வழி இருக்கிறதா என்று யோசிக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டில் மதிப்பு இல்லை, நண்பர்களும் இல்லை, கையில் பணமும் இல்லை என்பதால், நம்முடைய குடும்பத்தில்
இருப்பவர்களிடம் மனதில்கூட தேவையில்லாத நபராக மாறும் நிலைக்கு தள்ளபடுகின்றனர்.

10: நீங்கள் வளைகுடாவில் இருக்கும்போது, உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கிடைத்த அன்பையும் மரியாதையையும்,வளைகுடாவை விட்டு சென்றால் பெறுகிறீர்களா?  நீங்கள் வளைகுடாவில் இருந்து விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லும்போது தெரிந்த நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை கேட்டு, வளைகுடா வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து வீட்டிற்குச் செல்ல வேண்டாம். நல்ல காலங்களில் எதிர்காலத்திற்கு ஏதேனும் வருமானம் சேர்த்து வையுங்கள். உங்களுக்கு ஏதாவது செய்ய தைரியமும் விருப்பமும் இருந்தால் அல்லது ஒரு நிரந்தரமாக வருமானம் இருந்தால் நீங்கள் தைரியத்துடன் தாயகம் திரும்பலாம், உங்களுக்கு நாற்பது வயது ஆவதற்கு முன்பே செல்லுங்கள். வளைகுடாவை விட்டு வெளியேறுபவர்களை உதாசீனப்படுத்தும் பதிவல்ல இது. சில எச்சரிக்கைகள், நிதர்சனமான உண்மைகள் சொல்லும்போது,கேட்கும்போதும் கசப்பாக தெரியலாம்.... ஆனால் இதுதான் உண்மை.......

Gulf Life | Real Story | Tamil Article

Add your comments to Search results for Tamil Article

Monday, July 8, 2019

குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும் 21-வயது நிரம்பிய வெளிநாட்டினர் நபர்கள் இனிமுதல் நேரடியாக‌ தொழில்விசாவுக்கு மாறலாம்:


குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும்  21-வயது நிரம்பிய வெளிநாட்டினர்  நபர்கள் இனிமுதல் நேரடியாக‌ தொழில்விசாவுக்கு மாறலாம்:

குவைத்தில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆயிரக்கணக்கில் குடும்ப விசாவில்(Family Visa) குடும்பத்தினருடன் பல வருடங்களாக வேலை காரணமாக தொடர்ந்து வசித்து வருகிறார்கள். இவர்களில் 21-வயது நிரம்பிய தங்கள் குழந்தைகள் குவைத்தில் வேலை வாய்ப்பு பெறுவது இனிமுதல் எளிதாக இருக்கும் என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

சாதாரண குவைத்தில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டினர் குழந்தைகள் 1 முதல் 12 வரையிலான பள்ளிப் படிப்புகளை பெரும்பாலும் குவைத்திலேயே முடிப்பார்கள். அதன்பிறகு கல்லுரி மேற்படிப்புக்காக தங்கள் தாய் நாடுகளுக்கு செல்வார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் வேலை வாய்புக்காக WorkVisa-வில் புதிதாக மீண்டும் குவைத்திற்கு வரவேண்டிய நிலை இதுவரையில் இருந்துவந்தது.இதனால் காலதாமதம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குவைத் உள்துறை அமைச்சகம் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு புதிய உத்தரவு பிறப்பித்தது பச்சைக்கொடி காட்டியுள்ளது. அதாவது குடும்பத்துடன் வசிக்கும் நபர்களில் 21-வயது நிரம்பிய தங்கள் குழந்தைகளின் குடும்ப விசாவை எந்த தடையும் இன்றி நேரடியாக தொழில் விசாவாக(Workvisa) மாற்றிக் கொள்ளலாம்.இதன் மூலம் தாயகம் சென்று மீண்டும் வேலைக்காக புதிய தொழில் விசாவில் வரவேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது.

குடும்ப விசாவில் உள்ள 21 வயது நிரம்பிய எந்த ஒரு நபரும் குடும்பவிசா 22-ஐ (Article-22),தொழில் விசா 18-ஆக(Article-18) நேரடியாக எந்த தடையுமின்றி மாற்றலாம்.இதன் மூலம் இப்படிப்பட்ட நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வீணடிக்கப்படும் நேரம் மிச்சமாகும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by Kuwait tamil pasanga team.








Add your comments to Search results for Tamil Article