குவைத்தின் இன்றைய பகல் மற்றும் இரவு நேர வானிலை நிலவரம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
Image : Kuwait City
குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது
குவைத்தில் இன்று(16/02/24) வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பமாக இருக்கும் மற்றும் ஓரளவு மேகமூட்டமாகவும்,தென்மேற்கு காற்று மணிக்கு 20-55 கிலொமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20°C அளவுக்கும் அதிகபட்சமாக வெப்பநிலை 28°C அளவுக்கும் இருக்கும் மற்றும் நாட்டின் சில இடங்களில் தூசியை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக தூரப்பார்வை குறையும் வாய்ப்புள்ளதாகவும், சில நேரங்களில் சிதறிய மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நாட்டில் இரவு நேரம் நல்ல குளிரான வானிலை நிலவும், குறிப்பாக நாட்டின் எல்லைப்புற பகுதிகளான பாலைவன மற்றும் விவசாய இடங்களில் இது உணர முடியும் எனவும், அதேபோல் மேக மூட்டம் படிப்படியாக குறையும், மழைக்கான வாய்ப்பும் படிப்படியாக குறையும். லேசானது முதல் மிதமான காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மாறி வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 10-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் சில பகுதிகளில் லேசான மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 06:00 மணி வரையிலான 9 மணி நேரத்திற்கான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது, அதில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் எனவும், இதனால் நாட்டின் சில இடங்களில் பலத்த தூசிக்காற்று உயரும் மற்றும் சில பகுதிகளில் பார்வைத் திறன் குறையும் எனவும் மற்றும் கடல் அலை உயரம் 6 அடிக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Weather | Today Weather | Weather Report