BREAKING NEWS
latest

Kuwait Weather - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Weather செய்திகள், கட்டுரைகள், Kuwait Weather புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, February 15, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை,தூசிக்காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City Weather Update

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(15/02/24) வியாழக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பமாக இருக்கும் மற்றும் ஓரளவு மேகமூட்டமாகவும். தென்கிழக்கு திசையில் இருந்து காற்று மணிக்கு 20-55 கிமீ வேகத்தில் வீசும் எனவும், குறைந்தபட்சம் வெப்பநிலை 19°C அளவுக்கும் அதிகபட்சமாக வெப்பநிலை 28°C அளவுக்கும் இருக்கும் மற்றும் தூசியை உண்டாக்கும் வாய்ப்புடன், சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலான தூசிக்காற்று தொடர்பான வானிலை எச்சரிக்கையையும் வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது நாட்டின் சில இடங்களில் தூரப்பார்வை திறனை குறையும் எனவும் மக்கள் மற்றும் ஓட்டுநர்கள் எச்சரிக்கை இருக்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், தென்கிழக்கு காற்று மணிக்கு 15-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் தூசி காற்றுடன் மற்றும் அங்காங்கே மழைக்கான வாய்ப்பு உள்ளது, இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையாகவும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Tuesday, February 13, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 11°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(13/02/24) செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 11°C அளவுக்கும் அதிகபட்சமாக 24°C அளவுக்கும் இருக்கும், தென்மேற்குக் காற்று, மணிக்கு 06-26 கிமீ வேகத்தில் வீசும் எனவும், சில சிதறிய மேகங்கள் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், தென்கிழக்கு காற்று மணிக்கு 08-30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் சில சிதறிய மேகங்கள் ஆங்கங்கே தோன்றும், சில பகுதிகளில் பனிமூட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Friday, February 16, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய பகல் மற்றும் இரவு நேர வானிலை நிலவரம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(16/02/24) வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பமாக இருக்கும் மற்றும் ஓரளவு மேகமூட்டமாகவும்,தென்மேற்கு காற்று மணிக்கு 20-55 கிலொமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20°C அளவுக்கும் அதிகபட்சமாக வெப்பநிலை 28°C அளவுக்கும் இருக்கும் மற்றும் நாட்டின் சில இடங்களில் தூசியை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக தூரப்பார்வை குறையும் வாய்ப்புள்ளதாகவும், சில நேரங்களில் சிதறிய மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டில் இரவு நேரம் நல்ல குளிரான வானிலை நிலவும், குறிப்பாக நாட்டின் எல்லைப்புற பகுதிகளான பாலைவன மற்றும் விவசாய இடங்களில் இது உணர முடியும் எனவும், அதேபோல் மேக மூட்டம் படிப்படியாக குறையும், மழைக்கான வாய்ப்பும் படிப்படியாக குறையும். லேசானது முதல் மிதமான காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மாறி வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 10-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் சில பகுதிகளில் லேசான மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 06:00 மணி வரையிலான 9 மணி நேரத்திற்கான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது, அதில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் எனவும், இதனால் நாட்டின் சில இடங்களில் பலத்த தூசிக்காற்று உயரும் மற்றும் சில பகுதிகளில் பார்வைத் திறன் குறையும் எனவும் மற்றும் கடல் அலை உயரம் 6 அடிக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Monday, February 5, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(05/02/24) திங்கள்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 22°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 08-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 06-26 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Friday, February 9, 2024

குவைத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வானிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்பட்டு இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வானிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்பட்டு இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(09/02/24) வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 23°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 06-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 06-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேகங்கள் படிப்படியாக அதிகரிக்கும் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குவைத் வானிலை வரைபடங்களின் சமீபத்திய கணிப்புகள், வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் குளிர் மற்றும் ஆழமான காற்றழுத்தத்துடன் ஒரே நேரத்தில் மேலோட்டமான காற்றழுத்தத்தின் நீடிப்பால் நாடு வரும் நாட்களில் மழை உள்ளிட்ட காரணிகளால் பாதிக்கப்படும் என்பதைக் குறிக்கிறது, இது சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி, பெருக்கத்திற்கு வழிவகுக்கும். குறைந்த மற்றும் நடுத்தர மேகங்கள், குமுலோனிம்பஸ் மேகங்கள் மற்றும் லேசானது முதல் மிதமான தீவிரம் கொண்ட மழை, மற்றும் நிலையற்ற வானிலை சனிகிழமை மாலை தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை, மழைக்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரித்து இடியுடன் இருக்கும், மேலும் அவற்றின் தீவிரம் நடுத்தரத்திலிருந்து கனமாக மாறுபடும் வாய்ப்புகளுடன் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழியவும் வாய்ப்புள்ளதாகவும், தென்கிழக்கு காற்றுடன், மணிக்கு 60 கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் வீசும், இது தூசியைக் கிளறி, கிடைமட்ட பார்வையை குறைக்கிறது. சில பகுதிகளில் கடல் அலைகள் 7 அடிக்கு மேல் எழும்பும்.

மேலும் படிப்படியான வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மேகங்கள் குறைந்து திங்கள்கிழமை நண்பகல் முதல் மழைக்கான வாய்ப்புகள் குறைகின்றன, காற்றின் முன்னேற்றம் மற்றும் இரவில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு, சில பகுதிகளில் கிடைமட்டத் தெரிவுநிலை குறைவதற்கு வழிவகுக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Wednesday, February 7, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(07/02/24) புதன்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 23°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 10-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காங்கே மேகமூட்டம் சிதறி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 08-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Tuesday, February 6, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 6°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(06/02/24) செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 6°C அளவுக்கும் அதிகபட்சமாக 22°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 08-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 06-30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூடுபனிக்கான வாய்ப்பும் உள்ளது. சில பகுதிகளில் இடி மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Thursday, February 8, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(08/02/24) வியாழக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 23°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 08-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 08-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Sunday, February 11, 2024

குவைத்தில் இன்று ஆங்காங்கே கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது

குவைத்தில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Image : Al Mutlaa பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சி

குவைத்தில் இன்று ஆங்காங்கே கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது

குவைத் முழுவதும் இன்று(11/02/24) ஞாயிற்றுக்கிழமை அ‌திகாலை முதல் நாட்டின் வடக்கு பகுதிகளில் பலத்த மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில் நாட்டின் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அதனுடன் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், இதன் விளைவாக கடலோர கரையோரத்தில் 7அடிக்கு மேல் அலைகள் உயரும் மற்றும் தெரிவுநிலை குறைவு ஏற்படலாம். 15 மணி நேரம் நீடிக்கும் இந்த வானிலை எச்சரிக்கை இரவு ஒன்பது மணிக்கு முடிவடையும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தினங்களுக்கு முன்பு இது தொடர்பான அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ள இருந்த நிலையில் இந்த அறிவிப்பை வானிலை மையம் இன்று மீட்டும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து குவைத் உள்துறை அமைச்சகம் எந்தவிதமான அவசரகால உதவிக்கும் நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் 112 என்ற எண்ணில் அழைக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளது. குவைத் மட்டுமன்றி சவுதி, ஓமன், அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கும் இதை வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒமானில் பெரும்பாலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Sunday, February 4, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 6°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : குவைத் சிட்டி

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(04/02/24) ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை குளிர்ச்சியாகவும்,குறைந்தபட்சம் 6°C அளவுக்கும் அதிகபட்சமாக 21°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 06-26 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் கடுமையான குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 06-20 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Wednesday, February 14, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று வானிலை வெப்பம் குறைவாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : குவைத் வானிலை

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(14/02/24) புதன்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் குறைவாக இருக்கும். மூடுபனி, மேகங்கள் படிப்படியாக அதிகரித்து, தென்கிழக்கு திசையில் இருந்து காற்று மணிக்கு 08-50 கிமீ வேகத்தில் வீசும் எனவும், குறைந்தபட்சம் வெப்பநிலை 13°C அளவுக்கும் அதிகபட்சமாக 26°C அளவுக்கும் வெப்பநிலை இருக்கும் மற்றும் கிடைமட்டத் தெரிவுநிலை குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், தென்கிழக்கு காற்று மணிக்கு 15-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் தூசி காற்றுடன் மற்றும் சிதறிய மழைக்கான வாய்ப்பு உள்ளது, இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையாகவும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Sunday, January 17, 2021

குவைத்தில் கடுமையான குளிர் ஏற்படும்; பூஜ்ஜியம் டிகிரியாக குறையும் அதிகாரி தகவல்

(Kuwaitcity, Weather Report)

குவைத்தில் வருகின்ற புதன்கிழமை முதல் கடுமையான குளிர் தொடங்கும் என்ற தகவலை குவைத் வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குவைத் வா‌னிலை ஆய்வு மையத்தின், வானிலை ஆய்வாளர் முஹம்மது கரம் அவர்கள் இன்று(17/01/21) ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புதன்கிழமை மாலை முதல் நாட்டில் திறந்தவெளி பகுதிகள் மற்றும் பாலைவன பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரியாகவும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் மேற்கு ரஷ்யாவிலிருந்து வீசும் சைபீரிய காற்றின் வடமேற்கு காற்றோடு சேர்ந்து வருவதால் புதன்கிழமை மாலை முதல் சனிக்கிழமை வரையில் இந்த கடுமையான குளிர் தொடரும் என்று அவர் தெரிவித்தார். மாலை நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவது  இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Kuwait Weather | Zero Degrees | Weather Report

Add your comments to Search results for Kuwait Weather

Saturday, January 23, 2021

குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு

குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு;இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நாட்டில் குளிர் நிலவத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்

குவைத்தில் தற்போதைய குளிர் பிப்ரவரி வரையில் தொடரும் பிரபல வானியலாளர் அறிவிப்பு

குவைத்தில் தற்போது நிலவும் கடுமையான குளிர் பிப்ரவரி வரை தொடரும் என்று வானியலாளர் பிரபல ஆதல்-அல்-ஸாதுன் தெரிவித்துள்ளார். வழக்கமாக ஜனவரி 24- ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நீடிக்கும் குளிர்,இந்த முறை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நாட்டில் நிலவத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.குவைத் குடிமக்களிடையே 'குளிர்கால நீலம்' என்று அழைக்கப்படும் இந்த காலநிலை முகம் மற்றும் கை கால்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது என்றார், தற்போது நாட்டில் நிலவியுள்ள குளிர் சமீபத்திய ஆண்டுகளில் பதிவாகியுள்ள மிகவும் குறைந்த வெப்பநிலை எனவும் அவர் விளக்கியுள்ளார்.

கால்நடைகள் மற்றும் ஒட்டகங்களின் மூக்குகளின் வழியாக இரத்தப்போக்கு ஏற்படுவது இந்த காலநிலையின் ஒரு முக்கியமான அம்சமாகும், என்று அவர் கூறினார். மிதமான வேகத்துடன் வடமேற்கு காற்று வீசுவதும் சில நேரங்களில் காஸ்பியன் கடலில் உருவாகும் அதிக அடர்த்தியான காற்று குவைத் உட்பட அரேபிய தீபகற்பத்தின் சில பகுதிகளில் குளிர் அதிகரித்து வருவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இரவு வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அல்லது பூஜ்ஜிய டிகிரிக்கும் கீழ் வரையில் குறையும் எனவும், இந்த நாட்களில் மிகவும் பாதிக்கப்படுவது நாட்டின் பாலைவனப் பகுதிகள் மற்றும் விவசாய பகுதிகள் என்றும்,இங்கு சில நேரங்களில் குளிர் உறைபனி வரையில் நிலவும் என்றும் ஸாதுன் அவர் தெரிவித்துள்ளார்.

Kuwait Weather | Adel Astronomer | Kuwait People

Add your comments to Search results for Kuwait Weather