உணவே மருந்து,வளைகுடா வாழ் மக்களின் உணவு முறையும் மாற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களும்,குவைத் அரசு சுகாதரத்துறை செவிலியரின் அனுபவ பகிர்வு
Image credit: Google Photo
உணவே மருந்து,வளைகுடா வாழ் மக்களின் உணவு முறையும் மாற்ற வேண்டிய சில பழக்க வழக்கங்களும்
வளைகுடாவில் வசிப்பவர்களின் உடல்நிலையை பாதிக்கும் முக்கிய காரணியே உணவுப் பழக்கவழக்கங்களாகும். சரியான நேரத்திற்கு சாப்பிடாதது,சரிவிகித உணவை சாப்பிடாதது போன்றவை அல்சர் எனப்படும் வயிறு புண்,இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,சிறுநீரகப் பிரச்சனைகள்,கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கின்றது.இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது, அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு தான் இந்த பகிர்வு......
- சரியான நேரத்திற்கு சாப்பிடுவது.
- காலை உணவை தவிர்த்தல் கூடாது.
- துரித வகை உணவுகளை(fast food)தவிர்த்தல் நல்லது.
- அசைவ வகை உணவுகளை தினமும் சாப்பிடுவது பெரும்பாலோனர்களின் வழக்கமாக உள்ளது.அதை தவிர்க்க வேண்டும்.
- காய்கறிகள் நிறைய உண்ண வேண்டும்.
- குப்பூஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது சாலட் மற்றும் மோர் அல்லது பழச்சாறு குடித்தால் மலச்சிக்கலிலிருந்து விடுபடலாம்.
- பொரித்த உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தண்ணீர் குடிக்கும் பழக்கம் இங்குள்ளவர்களிடம் குறைவாக உள்ளது,அதை அதிகப்படுத்த வேண்டும்.
- கோதுமையில் செய்த உணவுகளை சாப்பிட வேண்டும்,மைதா வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- முட்டை சுலபமாக செய்யக்கூடிய உணவு என்பதால் அளவுக்கதிகமாக உட் கொள்வது நம் உடலின் பருமனை அதிகரிக்கும்.
- முடிந்த வரை வீட்டு உணவுகளை உண்பது நல்லது,தவிர்க்க இயலாத சமயத்தில் மட்டும் கடையில் சாப்பிட வேண்டும்.
- இரவு நேரங்களில் 8 மணிக்கே உணவை உட்கொள்வது செரிமானத்திற்கு நல்லது.
- பழச்சாறுகளை முடிந்தவரை Fresh Juice ஆக குடிப்பது நல்லது.
- Uric acid level சரியான அளவில் இருந்தால் பயிறு வகைகள் அதிகம் சாப்பிடலாம், அதேநேரம் பதப்படுத்தப்பட்ட டின்களில் உள்ள பயிறைத் தவிர்ப்பது நல்லது.
- குழம்பு மீன்களை அதிகம் சேர்த்துக் கொள்வது தோல் பளபளப்பாக இருக்க உதவும்.
- ஆரஞ்சு,நெல்லிக்காய்,எலுமிச்சை மற்றும் இஞ்சி சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- இடையிடையே வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கும்,உடல் எடையை குறைக்கவும் உதவும்.
- அரிசி உணவுவகைகளை ஒருநாளைக்கு ஒரு நேரம் சாப்பிட வேண்டும்.
- உப்பும்,சர்க்கரையும் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்,முடியாவிட்டால் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும்.எல்லோரும் சரியான உணவுப்பழக்கங்களோடு நல்ல ஆரோக்கியத்துடனும் ஆயுளோடும் இருக்க வேண்டும் இந்த வழிமுறைகள் ஓரளவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கலாம்......
Article Witter: க.நிர்மலா தமிழரசன்( குவைத் அரசு சுகாதரத்துறை செவிலியர்)
Heath Food | Gulf Life | Gulf Heath