குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் துவங்கிய நிலையில் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.ரம்ஜான் பண்டிகை நெருங்கிய வரும் நிலையில் அனைத்து கடைகளிலும் பொருட்கள் சிறப்பு சலுகை விலையில் விற்கப்படுவது வழக்கம் ஆகும்.
இந்நிலையில் குவைத்தில் உள்ள சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் 1 தினார் வரையில் எடுக்கக்கூடிய சிறப்பு ஏடிஎம் இயந்திரங்கள் குவைத் மத்திய வங்கி அமைந்துள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு என்பது 1,5,10 தினார் முதல் 20 தினார் வரையிலுள்ள எல்லா நோட்டுகளும் இதில் எடுக்கமுடியும் என்பதே சிறப்பு.குவைத்தில் Avuns mall,Gate mall,360 mall மற்றும் Awtad Jahra mall உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் அமைந்துள்ளன ஏடிஎம் இயந்திரங்களில் இவ்வாறு பண எடுக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக குவைத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் குறைந்தது 10 தினார் மட்டுமே எடுக்கமுடியும் அரிதாக சில இயந்திரங்களில் 5 தினார் எடுக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
Reporting by: Kuwaittamilpasanga team