சவுதியில் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த விதிமுறைகள் குறித்த விரிவான விளக்கம் பின்வருமாறு:
சவுதியின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பேணிக்காக்க கடந்த மாதம் சவுதி அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கி நிலையில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் ஆடை அணிவது ,பொது இடங்களில் உள்ள சுவர்கள் மற்றும் வாகனங்களில் வாசகங்கள் எழுதுவது மற்றும் வரைவது உள்ளிட்டவை செய்தல், தேவையற்ற கண்ணியமில்லாத பேசுங்கள் உள்ளிட்ட 10 விதிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளது.
வணிக வளாகங்கள்,ஹோட்டல், கடற்கரை பீச்,பூங்காக்கள்,சாலைகள், திரையரங்குகள் மற்றும் உல்லாச பொழுதுபோக்கு இடங்கள் ஆகிய இடங்களில் இந்த சட்டம் செல்லுபடியாகும் விதத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் நபர்களுக்கு 5000 ரியால் வரையில் பிழை விதிக்கப்படும்.
ஒரு வருடத்திற்குள் இதை தவறு செய்து பிடிபட்டால் பிழை இரண்டு மடங்குகள் வரையில் செலுத்த வேண்டியது நிலை ஏற்படும்.வெளியுறவுத்,சுற்றுலா துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறைகள் சேர்ந்தது சட்டத்தை ஒருங்கிணைத்து நிறைவேற்றும். பிழைதண்டனை கிடைத்த நபர் எந்த துறையின் கீழ் தண்டனை பெற்றிர்களோ அந்த துறையின் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஆகியவற்றை பேணும் விதத்தில் இந்த சட்டம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டம் சவுதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு ஒருபோல் பொருந்தும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Report by Kuwait tamil pasanga team