குவைத் தகவல் தொடர் மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் மற்றும் தலைமை நிர்வாவாக அதிகாரியுமான சலீம்-அல்-ஒத்தைன்யா அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பில் குவைத்தில் 5ஆம் தலை தொலை தொடர்பு சேவைகளின் வேலைகள் முடிவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் இதை குவைத் அரசு தளம் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள முக்கியமான தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வரும் ஜூன் 15 முதல் 5G சேவைகளை அறிமுகம் செய்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.4G நான்காம் தலைமுறை 5G தலைமுறை மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக அறிவிப்பு அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து குவைத்தில் உள்ள Zain, Ooredoo,Vivi ஆகிய தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேவையின் வேகம் 3.5 GHz அளவில் இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Report by Kuwait tamil pasanga team