BREAKING NEWS
latest

Wednesday, May 29, 2019

குவைத்தில் அடுத்த மாதம் கோடைக்காலம் உச்சமடையும் போது வெப்பநிலை 68 °C வரையில் தாக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது:

குவைத்தில் அடுத்த மாதம் கோடைக்காலம் உச்சமடையும் போது வெப்பநிலை 68 °C வரையில் தாக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது:


குவைத்தில் அடுத்த மாதம் கோடைக்காலம் உச்சமடையும் போது வெப்பநிலை 68 °C வரையில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

வானிலை மைய நிபுணர் ஈஸா

குவைத் வானிலை ஆய்வு மையம், குவைத் வானிலை மாற்றங்களை கண்டறிய நுண்ணறிவு சாதனங்களை நிறுவியுள்ளது, இதில் நேற்று 27/05/2019 மத்தியானம் 11 மணியளவில் வெப்பநிலையை கணிக்கும் நுண்ணறிவு கண்காணிப்பு சாதனத்தில் 63°C வெப்பநிலை பதிவானது என்று குவைத் பிரபல பத்திரிக்கை அல்-கபாப்-தினசரி நாளிதழில் செய்தி வெளியானது.
இது தொடர்பான தகவலை அதிகாரபூர்வ செய்தியாக வானிலை மையம் தெரிவிக்கவில்லை என்றாலும்.

             ஆனால் நேற்றைய தினம் வானிலை மையம்  45 °C என்ற அளவில் வெப்பநிலை இருந்ததாக அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது.மெல் குறிப்பிட்ட செய்தி தளம் வெளியிட்டதை தற்போது குவைத் பிரபல செய்தி தளங்கள் மற்றும் வலைதள செய்தி தளங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

                மெல் வெளியிட்டுள்ள செய்திக்கு குவைத் வானியல் நிபுணர் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரலுமான ஈஸா-ரமதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வானிலை ஆய்வு மைய கருவிகளில் பதிவாகும் வெப்பநிலை அளவுகளுக்கும், வாகனங்கள் உள்ளிட்டவையில் பதிவாகும் வெப்பநிலை பதிவுக்கும் சூரிய கதிர் நேரடியாக படுவதில் வேறுபாடுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
          பக்கத்தை அதிகமாக பகிர்வும் உண்மை செய்திகள் முடிந்த அளவு உடனுக்குடன் உங்கள் குவைத் தமிழ் பசங்க பக்கத்தில் அறியலாம்.

Report by Kuwait tamil pasanga team


Add your comments to குவைத்தில் அடுத்த மாதம் கோடைக்காலம் உச்சமடையும் போது வெப்பநிலை 68 °C வரையில் தாக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது:

« PREV
NEXT »