குவைத்தில் கடந்த டிசம்பர் 10 தேதி,2018 வேலைக்கு வந்த இந்திய தமிழக இளைஞர்கள் 7 உள்ளிட்ட 72 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணவு,சம்பளம் மற்றும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இன்று வெளியான வீடியோ காட்சிகள் Screen shot
இந்த பிரச்சினை தொடர்பாக இன்று மாலை முதல் வீடியோ ஒன்று வைரலாக பரவியது.இந்த வீடியோ எங்கள் பக்கத்திலும் பதிவு செய்தோம்.இந்த வீடியோ தொடர்பான உண்மை நிலை குறித்த புதிய செய்தி தற்போது குவைத் இந்திய தூதரக அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ளது.
புகார் பதிவு செய்ய தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்ற காட்சி
இந்த பிரச்சினை தொடர்பாக இயற்கனவே குவைத் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் Kuwait Public Manpower Authority அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொது Manpower Authority அதிகாரிகள் வழங்கி ஆலோசனையின் படி AbuFatira வில் உள்ள தொழிலாளர் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறிவுத்தப்பட்டது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர்கள் நீதிமன்றம் முன்பு
இதையடுத்து குவைத் தூதரக அதிகாரியின் ஆலோசனையின் படி குவைத் தூதரக பிரதிநிதியும் மற்றும் குவைத் மனித உரிமை ஆணைய பிரதிநிதியுமான ஆல்வின் ஜோஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு நீதிமன்றங்களுக்கு சென்று முதல் முறையாக ஓரிரு வாரங்களுக்கு முன்பே புகார் பதிவு செய்தார்.
பின்னர் நீதிமன்ற அதிகாரிகள் 5 நபர்கள் வீதம் புகார் மனு வழங்க அறிவுறுத்தியுள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் இவர்களிடம் படிப்படியாக புகார் பெற்று வழக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குப்பதிவு முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான வழக்குகள் முடிவதற்கு சிறிதுகாலம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தநடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது நிலையில் இன்று இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Report by Kuwait tamil pasanga team.