கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 80க்கும் அதிகமான வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும் தனியார் நிறுவன உரிமையாளா்கள் அதனை நிர்வகிக்கும் மேலாளா்கள் பங்கேற்றனா். அதில் பேசிய காவல்துறை துணைஆணையா் மயில்வாகனன் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சிகள் முறையாகவெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
உரிமம் பெற்றுள்ளவா்கள் 2 கிளைகள் மட்டுமே வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதற்கான உரிமத்தை வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பெற்றிருக்கவேண்டும் என்றார். யாரிடமும் பாஸ்போர்ட்களை வாங்கி வைக்க கூடாது. பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு 1 மாதகாலத்திற்குள் தங்கள் நிறுவனத்திற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஏஜென்சியும் எத்தனை வருடஒப்பந்தத்துடன் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புகிறார்களோ அவா்கள் திரும்பி வரும்வரை ஏஜென்சிகள் பொறுப்பேற்க வேண்டும். எந்த நிறுவனத்தின் மீது புகார்கள் வருகிறதோ உடனடியாக அவா்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.