கத்தாரில் உள்ளவர்கள் இனி தெளிவாக வாட்ஸ்-அப் அழைப்புகள் மூலம்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதாக அங்கிருந்து வரும் பிரபல செய்தி தளமான கத்தார் லிவிங் செய்தி
வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தார் - சவுதிக் கூட்டணி நாடுகளுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் வாஸ்-அப், வைபர் உள்ளிட்ட அனைத்து இலவச அழைப்பு செயலிகள் மூலம் அழைக்கும்
வசதிகள் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டன குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களாக கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் உட்பட அனைவரும் வாட்ஸ்-அப் அழைப்புக்காக VPN உதவிய நாடிக் கொண்டிருந்தனர்.ஆனால் தற்போது VPN உதவியின்றி நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்பதாக கத்தார் லிவிங் தெரிவித்துள்ளது. கத்தாரில் வாட்ஸ்-அப் அழைப்பு வசதி சிறப்பாக செயற்படுவதைதாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Report by Kuwait tamil pasanga team.