இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறார் நரேந்திர மோடி.
இவரின் தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதில் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் பதிவி ஏற்றதமுதல் பல தமிழ் உறவுகள் கேள்வி யார் இவர். இவருக்கு எதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களின் வெளியுறவு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது....வாருங்கள் பார்ப்போம் விரிவாக........
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த இரண்டாவது மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்(வயது 64)
இவர் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஆவார்.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்தியாவின் பாதுகாப்புத்துறை விவகாரங்களில் மூத்த ஆலோசகராக செயல்பட்ட கே.சுப்பிரமணியத்தின் மகன் ஆவார். கே,சுப்பிரமணியம் பிறந்தது திருச்சிராப்பள்ளி.ஜெய்சங்கர், டில்லியில் பிறந்திருந்தாலும், பூர்வீகத்தின் அடிப்படையில் அவர் ஒரு தமிழர் ஆவார்.
இவர் 1977ம் ஆண்டு IFS அதிகாரி ஆவார். 2009 -13 வரை சீனாவிற்கான இந்திய தூதராகவும், 2014-15ம் ஆண்டில் அமெரிக்காவிற்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார்.ஐரோப்பிய நாடுகளின் தூதராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இந்திய – அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.மிக அதிக காலம், வெளியுறவுத்துறை செயலர் பதவி வகித்தது மற்றும் பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு புத்துயிர் அளித்தது உள்ளிட்ட காரணங்களால் ஜெய்சங்கர் சுப்பிரமணியத்திற்கு, பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை பதவி வழங்கி கவுரவித்துள்ளார்.
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை மையமாக கொண்டு சீனா நிகழ்த்தி வரும் சடுகுடு ஆட்டத்தின் ஒருபகுதியான டோக்லாம் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் ஜெய்சங்கருக்கு முக்கிய பங்குண்டு. இவரது பதவிக்காலத்தில், இந்தியா – சீனா இடையே வர்த்தகம், எல்லை விவகாரம் மற்றும் கலாச்சார உறவுகள் மேம்பட முக்கிய பங்காற்றினார்.இவரின் நிர்வாகத்திறன் மற்றும் சேவையை பாராட்டி, மத்திய அரசு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
மேலும்,
இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் விருப்பமான அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். 2014-ல் மோடி பிரதமரானபோது வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர் சுஜாதா சிங். தமிழரான உ.பி. முன்னாள் ஆளுநர் டி.வி.ராஜேஷ்வரின் ஒரே மகளான சுஜாதாவுக்கு கடந்த 2015, ஜனவரியில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அவரது பதவியில் 1977-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான எஸ்.ஜெய்சங்கரை மோடியால் நியமிக்கப்பட்டார். மன்மோகன் சிங் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்தபோது, தனது வெளியுறவுத்துறை செயலாளராக ஜெய்சங்கரை நியமிக்க பெரிதும் விரும்பினார்.
ஆனால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி டி.வி.ராஜேஷ்வரின் மகள் என்பதால் சுஜாதாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்திரா பிரதமராக இருந்தபோது மத்திய உளவுத்துறை தலைமை அதிகாரியாக இருந்தவர் ஐ.பி.எஸ் அதிகாரி ராஜேஷ்வர் ஆவார்.சோனியா காந்தியின் வற்புறுத்தலின் பேரில் சுஜாதாவுக்கு அப்பதவி கிடைத்ததாகவும் அந்த நேரத்தில் செய்திகள் வெளியானது
மோடி பிரதமராகி முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது அங்கு இந்திய தூதரக அதிகாரியாக இருந்த ஜெய்சங்கர் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்தார். அப்போது, அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய தூதரக அலுவலக அதிகாரியான தேவயானி அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு சற்று இறுக்கமானது. அதை ஜெய்சங்கர் தனது திறமையான செயல்பாடுகளால் சமாளித்ததுடன் மோடியையும் கவர்ந்தார்.
இவர் பத்மபூஷண் விருது பெற்ற ஜெய்சங்கர் தனது ஓய்வுக்கு பிறகு டாடா குழுமத்தில் சர்வதேச பெருநிறுவன விவகார பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். இவரது திறமையை தனியார் பெருநிறுவனம் பயன்படுத்துவதை விட அவரை அமைச்சராக்கி நாட்டுக்கு பயன்படுத்த பிரதமர் நினைத்திருப்பார்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்:
கடந்த மோடியின் ஆட்சியில் வெளியுறவுத்துறையில் மிகவும் உற்சாகமாக, பாராட்டும் வகையில் செயல்பட்ட சுஷ்மா சுவராஜ்க்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை.உலகின் எந்த நாட்டிலும் ஒரு இந்தியர் பாதிக்கப்பட்டு உதவி கேட்டு ட்விட்டரில் கோரிக்கை விடுத்தாலும் உடனடியாக அவர்களுக்கு உதவும் சுஷ்மாவின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதேசமயம், சுஷ்மாவுக்கு உடல்நலன் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்ததால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசின்போது, பாஜகவின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர், தமக்கு கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
Note:பல தளங்கள் செய்திகள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது நமது வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை செய்யும் நமது மக்களுக்கு எந்த அரசு வந்தாலும் வெளிநாட்டில் வேலை செய்யும் நமது வாழ்வில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பது கரிசனமான உண்மை.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Report by Kuwait tamil pasanga team