குவைத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த உறவுகளுக்கு அவசரகால தேவைகளுக்கு பலர் உதவி வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது:
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் சந்திப்பு
குவைத்தில் கடந்த டிசம்பர் 10, 2018 அன்று வேலைக்கு வந்த தமிழக இளைஞர்கள் 7 பேர் உள்ளிட்ட 72-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உணவு, சம்பளம் மற்றும் வேலை இல்லாமல் Mahabula பகுதியில் ஒரு குடியிருப்பில் தவித்து வருகின்றனர்.
இந்த செய்தி நேற்று எங்கள் தளம் உட்பட குவைத்தில் உள்ள பல்வேறு தளங்கள் செய்தியாக வெளியிட்டது.இதன் எதிரொலியாக அவர்கள் அடிப்படை தேவைகளுக்கு பலரும் உதவி வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
குவைத்தில் உள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரதிநிதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். இன்றைய அவர்களுக்கு தேவையான உணவை வழங்கினர், பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தனர்.
சங்கத்தின் ஒலி/ஒளிப்பரப்பு குழு செயலாளர் புதூர் உத்தமனூர் எம். ஜலீல் மற்றும் மங்காஃப் கிளை செயலாளர் கும்பகோணம் கே. உமர் ஆகியோர் இப்பணியை செய்தனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
குவைத் செந்தமிழ் பாசறை பிரதிநிதிகள் சந்திப்பு
இதுபோல் இவர்களின் அதனடிப்படையில் பிரச்சனை குறித்து அறிந்த குவைத் செந்தமிழர் பாசரை சார்பாக அதன் பிரதிநிதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மூலம் மத்திய மாநில அரசுக்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கபட்டது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவின் Screenshot