ஆமாம் சும்மா திருமணம் செய்து வைக்கவில்லை அதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளது.
கேரளா மாநிலம் திருநக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜி இவர் நம்மைப் போன்று ஒரு வளைகுடா வாழ் தொழிலாளி ஆவர். இவருடைய மகன் 6 வருடங்களுக்கு முன்பு +2 படிக்கும் நேரத்தில் தன்னுடைய படிக்கும் பெண்ணை காதலித்தார். இதையடுத்து இரண்டு பேரும் அந்த சின்ன வயதில் வீட்டைவிட்டு தலைமறைவு ஆனார்கள்.
இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கண்டுபிடிப்பு காவல்நிலையம் அழைத்து வந்தனர்.இதையடுத்து பெண்ணின் விட்டார் இவள் எங்களுக்கு தேவையில்லை என்றுகூறி அவளை ஏற்க்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவளுக்கு திருமண வயது வந்ததும் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஷாஜி முடிவு செய்தார். பெண்ணை தன்னுடைய மகளைபோல் வீட்டில் நிறுத்தி மேற்படிப்பு படிக்க வைத்தார்.
தன்னுடைய பையனை கல்லூரி விடுதியிலும் தங்கவைத்து மேற்படிப்பை படிக்க வைத்தார் ஷாஜி. இதையடுத்து மகனின் படிப்பு முடிந்தநிலையில் தன்னுடன் வளைகுடாவில் வேலைக்கு அழைத்து வந்தார்.
இதற்கிடையில் அவருடைய மகன் வேறொரு பெண்ணை காதலித்தார்.கடந்த விடுமுறையில் தாயகம் சென்ற அவன் அந்த பெண்ணை திருமணம் செய்தார். இந்த செய்தி அறிந்து தாயகம் வந்த ஷாஜி தன்னுடைய மகனுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொண்டார்.
இந்நிலையில் தன்னுடைய மகளை போல் வளர்த்த மகனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அவளைப்பற்றி அனைத்தையும் அறிந்த புரிந்த ஒரு பையனுக்கு இன்று திருமணம் செய்து வந்தார்.
இதையடுத்து ஷாஜியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.மேலும் தன்னுடைய வீடு உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் அந்த பெண்ணுக்கே ஷாஜி எழுதி வைத்தார்.
ஷாஜி யின் மகனுக்கு ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தும் ஷாஜி வழங்கவில்லை.
Report by Kuwait tamil pasanga team