சவுதியை குறிவைத்து கடந்த சில ஆண்டுகளாக எமன் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்த வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விமான நிலையங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலில் அதிக அளவில் நடத்தி வருகின்றனர்.Abha விமான நிலையத்தை குறித்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி நடந்த தாக்குதலில் விமான நிலையத்தில் பயணிகள் வரவேற்பறை பகுதியில் டிரோன் விழுந்து வெடித்ததில் இந்திய பெண்மணி,குழந்தைகள் உள்ளிட்ட 26 பயணிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில் சற்றுமுன் மீண்டும் Abha சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து எமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி என்றும் 8-ற்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.சவுதியில் நேரப்படி இரவு 9:45 pm மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ஓடுபாதையில் சென்ற விமானத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில், தவறுதலாக வாகனங்கள் பார்க்கிங் பகுதியில் பதித்து வெடித்து சிதறியது.இதில் பல வாகனங்கள் சேதமடைந்தது என்று அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கிறது.
இதை சவுதியின் Al-Arabiya டிவி உறுதிசெய்து வெளியிட்டுள்ளது.Abha சர்வதேச விமான நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையம் என்று சவுதி பாதுகாப்பு படை அதிகாரி துர்கி-அல்-மாலிகி கூறினார்.மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு மணிநேரத்திற்கு பிறகு விமான நிலையம் எப்போதும் போல இயக்கத்திற்கு வந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
எமன் கிளர்ச்சியாளர்கள் நேற்று இது போல் இரண்டு ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலை சவுதி பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. எமன் எல்லையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் Abha விமான நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Reporting by Kuwait tamil pasanga team.