BREAKING NEWS
latest

Friday, June 21, 2019

குவைத்தில் வெயில்கால மத்தியான ஓய்வு நேரத்தில் கட்டாயபடுத்தி வேலை செய்யவைத்தால் நபர் ஒன்று 100 தினார் அபராதம்:



  1. குவைத்தில் வெயில்கால மத்தியான ஓய்வு நேரத்தில் கட்டாயபடுத்தி வேலை செய்யவைத்தால் நபர் ஒன்று 100 தினார் அபராதம்:

குவைத்தில் வெளிப்புறத்தில் மத்தியானம் 11:00 முதல் 04:00 வரையில் தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதற்கு தடை உத்தரவு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த உத்தரவு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதையடுத்து பல பகுதிகளில் தொழிலாளர்களை உத்தரவை மீறி சில கம்பெனிகள் வேலையில் அமர்த்தி வருகிறது என்று புகார் எழுந்த நிலையில்.
 குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் (PMD) அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.மொத்தம் இதற்காக 6 குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும். இவர்கள் குவைத்தில் 6 மாகாணங்களிலும் தோடர் சோதனை மேற்கொள்வார்கள் என்று அதிகாரி Nayef Al-Mutairi அவர்கள் தெரிவித்துள்ளார்.

  தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய தொடர்பான சட்டம் 180 பிரவின் கீழ் மீறல் கண்டால் தொழிலாளர் ஒருவருக்கு 100 தினார் வீதம் பிழை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் தொடர்ந்து இதை குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் கம்பெனிகள் மீது சட்டபடி நடவடிக்கைகள் எடுக்க சம்மந்தப்பட்ட துறையிடம் பரிந்துரை செய்யட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
     
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்தில் வெயில்கால மத்தியான ஓய்வு நேரத்தில் கட்டாயபடுத்தி வேலை செய்யவைத்தால் நபர் ஒன்று 100 தினார் அபராதம்:

« PREV
NEXT »