குவைத்தில் நேற்று நடந்த சோதனையில் 120 பேர் கைது;கடந்த மூன்று நாட்களில் மட்டும் 874 பேர் வரையில் அதிரடி கைது:
குவைத்தில் ரம்ஜான் முடிந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து குவைத்தில் கடந்த மூன்று தினங்களாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறியும் சோதனையில் Jleeb Al-Shuyoukh மற்றும் Salmiya பகுதியில் 18/06/19 நடந்த சோதனையில் 522 பேரும்,Bneid Al-Gar, Sharq மற்றும் Ahmadi பகுதியில் 17/06/19 நடந்த சோதனையில் 232 கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று குவைத்தின் Kabd, Sulaibiya மற்றும் Jahra தொழிற்துறை பகுதியில் நடந்த சோதனையில் 120 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மூன்று நாட்களில் இதுவரையில் 874 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று கைது செய்யப்பட்ட நபர்கள் விபரங்கள் பின்வருமாறு:
1) 20 expired residencies
2) 10 civil cases
3) 9 vehicles seized
4) 3 drugs cases
5) 4 hawkers
6) 12 absconding cases
7) 43 without identifications
8) 57 traffic violations
9) 58 violating labor law
மேலும் 587 நபர்கள் ஆவணங்கள் சரிபார்த்து பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வரும் நாட்களில் தொடரும் என்றும் எனவே குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் குவைத் அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையற்ற இன்னல்களை தவிர்க்கவும் என்று குவைத் உள்துறை அமைச்சகம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
Reporting by Kuwait tamil pasanga team.