துபாயில் 15 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரியிடம் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி கவுரவிக்கபட்டார்:
துபாயில் துப்புரவு தொழிலாளி வேலை செய்யும் இளைஞர் அலி மக்பூல்(வயது-27) பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 15 கிலோ தங்கம் அதாவது சுமார் 2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பையை கீழே கிடந்து கண்டெடுத்தார்.
இதையடுத்து அந்த பையை துபாய் சாலை போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைத்தார்.என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்த எதையும் எப்பொதும் நான் மறக்கவில்லை என்று கூறினார். உன்னுடைய வருமானம் நேர்மையான மூலங்களிலிருந்து கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள் என்று எனது தந்தை எப்போதும் கூறுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாக்பூலை அண்மையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் Al Sabkha நேரில் அழைத்து கவுரவித்தார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.எனக்கு வழங்கிய மரியாதைக்கு நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.நான் எனது கு டும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அதிகாரிகளின் பேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்ந்தேன் எல்லோரும் என்னை வாழ்த்தினார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என்று நான் என் தந்தையிடம் சொன்னபோது, நான் சரியானதைச் செய்தேன், அவர் என்னைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார் என்று கூறினார்.அது ஒரு பெரிய உணர்வு பூர்வமான நிமிடம் என்றார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின்
சியால்கோட் நகரத்திலிருந்து 25 இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள சக்ரி கிராமத்தைச் சேர்ந்த மக்பூல் என்பது குறிப்பிடத்தக்கது.
சியால்கோட் நகரத்திலிருந்து 25 இருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள சக்ரி கிராமத்தைச் சேர்ந்த மக்பூல் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team.