BREAKING NEWS
latest

Monday, July 1, 2019

கஜகஸ்தான் எண்ணெய் வயல்வெளியில் பயங்கர சண்டை தமிழர்கள் உள்ளிட்ட 150 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது:

கஜகஸ்தான் எண்ணெய் வயல்வெளியில் பயங்கர சண்டை தமிழர்கள் உள்ளிட்ட 150 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது:

கஜகஸ்தான் நாட்டில் Tengizch பகுதியில் மிகப்பெரிய எண்ணெய் வயல்வெளி உள்ளது.15000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வருகிறார்கள்

இந்நிலையில் அங்கு வேலை செய்யும் லெபனான் நாட்டைச் சேர்ந்த இஞ்சினியர் வெளியிட்ட ஒரு புகைப்படம் உள்ளூர் மக்களை விமர்சனம் செய்யும் விதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சரமாரியாக கடுமையாக தாக்கினர், இதையடுத்து பிரச்சினை கலவரமாக மாறியது.இதில் குறைந்தது 30-ற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 150 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்த இடத்தில் வேலை செய்து வருகிறார்கள் என்றும் கலவரமாக காரணமாக அனைவரும் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தக்கவைக்கபட்டுளனர் என்றும் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

இதில் தமிழகம்,கேரளா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அடங்குவார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலை சீரான பின்னர் மட்டுமே அவர்கள் அனைவரும்  பாதுகாப்பாக முக்கிய நகரங்களுக்கு செல்ல முடியும் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

அவசரகால உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.For any assistance required please contact us on +77012207601

Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to கஜகஸ்தான் எண்ணெய் வயல்வெளியில் பயங்கர சண்டை தமிழர்கள் உள்ளிட்ட 150 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »