BREAKING NEWS
latest

Sunday, June 23, 2019

அமீரகத்தில் பெற்றோருடன் சுற்றுலா வரும் 18-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


அமீரகத்தில் பெற்றோருடன் சுற்றுலா வரும் 18-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அமீரகத்தின் Federal Authority of Identity and Citizenship துறையானது இந்த அறிவிப்பை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூலை15 தேதி முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் ஆண்டுதோறும் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் அமீரகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
           இந்த திட்டத்தில் பெற்றோருடன்
18 வயதிற்கு கீழ் உள்ள  நபர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி விசா வழங்கப்படும். இதற்காக  எமிரேட்ஸ், இத்திகாத் மற்றும் எயர் அரேபியா ஆகிய நிறுவனங்களின் அந்தந்த நாடுகளில் உள்ள
அலுவலகங்கள் வழியாக விசா விற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும் சுற்றுலா வரும் நபர்களை கவரும் விதத்தில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விடுமுறையை கழிக்க வரும் நபர்களை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும்.
           விமான நிலையங்கள் மற்றும் சோதனை சாவடியில் இதற்காக அனைத்து திட்டங்களுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமீரகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு 14 நாட்களுக்கான விசா கட்டணமாக நபர் ஒன்றுக்கு 497 திர்ஹம்களும் மற்றும் ஒரு மாதத்துக்கு 917 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga team.


Add your comments to அமீரகத்தில் பெற்றோருடன் சுற்றுலா வரும் 18-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

« PREV
NEXT »