வளைகுடா நாடுகளில் பீதியை ஏற்படுத்தி மீண்டும் இன்று 2 எண்ணெய் கப்பல்கள் மீது பயங்கர தாக்குதல்:
வளைகுடா சில மாதங்களாக ஈரான் அமெரிக்கா போர்ச்சூழல் நிலவிவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஓமன் கடல் பரப்பில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.இந்த தாக்குதல் Local நேரப்படி காலை 6:12 மற்றும் 7:00 மணிக்கு நடந்தது என்று பஹ்ரைனில் உள்ளU US கடற்படை கட்டுப்பாடு மையத்தின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.மேலம் இரண்டு கப்பல் நிறுவனங்களும் இதை உறுதி செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் இரண்டு கப்பல்களும் பலத்த சேதமடைந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.இதில்
ஒரு கப்பலில் உள்ள அனைத்து ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.மேலும் மற்றொரு கப்பலில் உள்ள சில ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது என்றும் அனைவரும் மீட்கப்பட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

இதையடுத்து சர்வதேச எண்ணெய் சந்தையில் எண்ணெய் வர்த்தகத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தய இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள் வரையில் இன்று மட்டும் அதிகரித்துள்ளது என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.