குவைத்தில் அனுமதி இன்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்:
குவைத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது நேற்று முன்தினம் மாலையில் Maliya பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பேரணியை ஏற்பாடு செய்வதற்காக 21 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இவர்கள் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றுகூடி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
குவைத்தில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் வெளிநாட்டினர் முன்அனுமதி இன்றி சட்டவிரோதமாக நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் எதிர்ப்பு அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி இல்லை.குவைத் நாட்டின் சட்டபடி இது கடுமையான குற்றமாகும்.கைது செய்யப்பட நபர்கள் அனைவரும் மெல் நடவடிக்கைக்கு பிறகு நாடுகடத்தப் படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.இதற்காக இவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு இதுபோல் ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் இதுபோல் சிலரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

Reporting by Kuwait tamil pasanga team.