குவைத் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த அதிரடி சோதனையில் 232 நபர்கள் கைது செய்யப்பட்டனர்:
குவைத்தில் ரமலான் நோன்பு முடிந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறியும் சோதனை நேற்று திங்கட்கிழமை (17/06/2019) முதல் துவங்கியுள்ளது.யாரும் எதிர்பாராத நேரத்தில் தப்பிக்க முடியாதபடி பாதைகள் அடைத்தது நடைபெற்ற சோதனையில் 232 கைது செய்யப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சோதனை குவைத்தின் Bneid Al-Gar, Sharq மற்றும் Ahmadi ஆகிய இடங்களில் தொழிற்சாலை பகுதியில் நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த சோதனை பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.சோதனையின் போது சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.இதில் பெரும்பாலான நபர்கள் விசா காலாவதி முடிந்ததும்,பலர் சரியான ஆவணங்கள் இல்லாமலும் கைது செய்யப்பட்டவர்கள்.
இப்படிப்பட்ட நபர்கள் நாடுகடத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டு விரல் அடையாளம் பதிக்கப்பட்டு குவைத் வரமுடியாது படி தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள்.குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட துறையினர் வசம் ஒப்படைக்கபபடுவார்கள்.
நேற்று நடந்த சோதனையில் சிக்கிய நபர்கள் விபரங்கள் பின்வருமாறு:
1) 75 நபர்கள் காலாவதி விசா தொடர்பாக கைது செய்யப்பட்டனர்
1) 75 நபர்கள் காலாவதி விசா தொடர்பாக கைது செய்யப்பட்டனர்
2)12 நபர்கள் தொழிலாளர் சட்டத்தை மீறிய வழக்குகளில் கைது செய்யப்பட்டனர்.
3) 11 நபர்கள் கிரிமினல் வழக்குகளில் தேடப்பட்ட நபர்கள்
4) 11 நபர்கள் சிவில் வழக்குகளில் தேடப்பட்ட நபர்கள்
5) 21 நபர்கள் முதலாளி மூலம் வீட்டைவிட்டு ஓடிய வழக்குகளில் தேடப்பட்ட நபர்கள்
6) 99 நபர்கள் தகுந்த ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டனர்
7) ஒரு நபர் கட்டத்திற்கு புறம்பாக எல்லை வழியாக குவைத்தில் நுழைந்த நபர்
8) 2 பேர் மதுபான வழக்குகளில் சிக்கினர்
9) 4 காணாமல் போன வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகியவை இதில் அடங்கும்.மேலும் 900 ந ற்றபர்களின் ஆவணங்கள் சரிபார்த்து பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9) 4 காணாமல் போன வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகியவை இதில் அடங்கும்.மேலும் 900 ந ற்றபர்களின் ஆவணங்கள் சரிபார்த்து பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வரும் நாட்களில் தொடரும் என்றும் எனவே குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் குவைத் அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையற்ற இன்னல்களை தவிர்க்கவும் என்று குவைத் உள்துறை அமைச்சகம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.
Reporting by Kuwait tamil pasanga team.