BREAKING NEWS
latest

Wednesday, June 19, 2019

குவைத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 20,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டது என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்:

குவைத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 20,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டது என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்:

 குவைத்தில் கடந்த 3 வருடங்களில் பல்வேறு காரணங்களால் 20,000  வெளிநாட்டினர் குடியேற்ற அனுமதி(Work permit) ரத்து செய்யப்பட்டது என்று பாராளுமன்றத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான துறை அமைச்சர் மரியம்-அல்-கேயில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஆதாரங்களையும் அவர் காட்டியுள்ளார்.அதாவது 20,000 பேர் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் பலரது விசாகள் அவர்கள் வேலைக்கு, கல்வி தகுதிக்கும்  தொடர்பே இல்லாமல் வேலை செய்த நபர்கள் ஆவார்கள்.
         மேலும் மரியம் கூறுகையில் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் 12,3573 குவைத் தினார் பணத்தை தொழிலாளர்கள் புகார் அடிப்படையில் தொழிலாளர்களை வினியோகம் செய்யும் ஏஜென்சிகள் மற்றும் கம்பெனிகளிடம் பிழையாக வசூலிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
          மேலும் நாடுகடத்தல் மையத்தில் உள்ள 500 பெண்களில் 194 பேர் நாடுகடத்தப்பட்ட ரன் என்றும் மற்றவர்கள் வரும் நாட்களில் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
        மேலும் குவைத்தில் sponsor (முதலாளி) மூலம் தலைமறைவு (absconding) வழக்குகள் உள்ள தொழிலாளர் பிழையை செலுத்தி தங்கள் வேலையை மாற்றிக்கொள்ள 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to குவைத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 20,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டது என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்:

« PREV
NEXT »