BREAKING NEWS
latest

Friday, June 21, 2019

சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 சிம்கார்டு வரையில் எடுத்து மோசடி நடைபெறுவதாக புகார்கள் வெளியாகியுள்ளது:

சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 சிம்கார்டு வரையில் எடுத்து மோசடி நடைபெறுவதாக புகார்கள் வெளியாகியுள்ளது:

    சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 ற்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் குறிப்பிட்ட நபருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக எடுப்பதாக தொடர்பு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
        இதையடுத்து தொலைதொடர்பு துறை விசாரணை துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. சவுதியில் ஒருவர் பெயரில் ஒரு தொலைதொடர்பு நெட்வொர்க்கில் இருந்து இரண்டு சிம்கார்டு வரையில் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
     ஆனால் இந்த சிம்கார்டு எடுக்கும் போது விரல் அடையாள பதிவு எடுக்கப்படும்.இப்படி எடுக்கப்படும் பதிவை சில சிம்கார்டு விற்பனை செய்யும் பல கடைகள்.அதே நபரின் பெயரில் போலியான Postpaid Sim மற்றும் Pripaid Sim ஆகிய இணைப்பு எடுத்து பலருக்கு சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து மோசடி செய்கிறார்கள்.
     கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதை புகாரில் இரண்டு இந்தியர்களை காவல்துறை கைது செய்தது.தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்களுக்கும் அவர்கள் பெயரில் பயன்படுத்தி சிம்கார்டு இந்த அப்பாவிகள் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
     நண்பர்களே எனவே நீங்கள் எந்த நெட்வொர்க் சிம்கார்டு பயன் படுத்தினாலும் அந்த நெட்வொர்க் வாடிக்கையாளர் சேவை மைய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
     இல்லையெனில் விடுமுறை உள்ளிட்டவை காரணமாக விமான நிலையத்தில் வரும்போதுதான் இதுபோன்ற ஏமாற்று வேலைகளால் தாயகம் திரும்ப முடியாதபடி தடைகள் உள்ளது தெரியவரும்.
     இதுவே உங்களுக்கு பாதுகாப்பு நன்றி

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 சிம்கார்டு வரையில் எடுத்து மோசடி நடைபெறுவதாக புகார்கள் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »