குவைத்தின் Farwaniya மற்றும் Hawli மாகாணத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் தலைமையில் Jleeb Al-Shuyoukh மற்றும் Salmiya பகுதிகளில் பாதைகள் அடைக்கப்பட்டு தப்பிக்க முடியாதபடி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு(18/06/19) வரையில் நடந்த சோதனையில் 522 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் 226 நபர்கள் Salmiya பகுதியிலும் 296 in Jleeb Al-Shuyoukh பகுதியிலும் கைது செய்தனர் என்று
செய்தியில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:
1)70 with expired residencies,
2) 21 hawkers
3) 6 criminal cases
4) 37 civil cases
5)70 absconding cases
6) 156 without identifications,
7)4 vehicles seized
8)1 illegal entry
9)7 liquor and drugs cases மற்றும்
10)150 traffic violations ஆகியவை அடங்கும்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17/06/2019) குவைத்தின் Bneid Al-Gar, Sharq மற்றும் Ahmadi ஆகிய இடங்களில் தொழிற்சாலை பகுதியில் நடந்தது சோதனையில் 232 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்தில் குறைந்தது ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியா, இலங்கை,நேபாளம்,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனை வரும் நாட்களில் தொடரும் என்றும் எனவே குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் குவைத் அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையற்ற இன்னல்களை தவிர்க்கவும் என்று குவைத் உள்துறை அமைச்சகம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகமான நபர்கள் விசா காலாவதி ஆகியும்,சரியான ஆவணங்கள் இல்லாமலும் தங்கி வருகிறார்கள்..சில கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நபர்களும் இதில் அடங்குவார்கள்.
Reporting by Kuwait tamil pasanga team.