அமீரகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வணிக துறையின் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக பொருட்கள் ஆன்லைன் விற்பனை செய்யும் நபர்களுக்கு 5 லட்சம் திர்ஹம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்று உணவுப், உடைகள்,எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள் விற்பனை செய்ய வணிக துறையின் லைசென்ஸ் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களை குறிவைத்து உணவு விற்பனை உள்ளிட்ட ஆன்லைன் வியாபாரங்கள் அதிகரித்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை சம்மந்தப்பட்ட துறை துவங்கியுள்ளது.
இதுபோன்ற அனுமதி இல்லாமல் இயங்கும் இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் உடனடியாக மூட வேண்டும் என்று வாணிக துறை அமைச்சகம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.