குவைத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவும் செய்தி ஓட்டுநர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது குவைத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான
7th Ring சாலையில் வேகம் கட்டுப்பாடு 120 கிலோமீட்டர் இருந்து 60 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது என்பதே அந்த பரவும் செய்தி.இது முற்றிலும் தவறான தகவல் என்றும் குவைத்தில் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்து.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7th Ring சாலையில் எப்போதும் உள்ளது போல் தான் சாலையில் வாகனங்கள் செல்லும் வேகம் உள்ளது என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் இந்த சாலையில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த பகுதியில் மட்டும் ஓட்டுநர்கள் தங்கள் வேகத்தை குறைத்து 60 முதல் 80
கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கினால் போதும் எனவும், பராமரிப்பு பகுதியில் தாண்டியதும் மீண்டும் உங்கள் வாகனங்களை பொறுத்து வேகம் 120 கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கலாம் என்று செய்தியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பொய்யான தகவல் காரணமாக இந்த பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே-24, 2019 முதல் மே-30,2019 வரையில் இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களில் 13,051 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Report by Kuwait tamil pasanga team.