குவைத் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தை மேற்கொள்காட்டி அரபு பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத்தில் தனியார் துறையில் உள்ள கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு 7-நாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்றும்அது அதிகபட்சமாக 8-வது நாள் வரையில் செல்லலாம் என்று மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட கம்பெனிகளின் அரசு சார்ந்த ஆவணங்கள் எதுவும் மேற்கொண்டு அரசு செயல்படுத்தாது எனவும் கிடப்பில் போடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்படியென்றால் இங்குள்ள 40 சதவீதம் கம்பெனிகள் மூடுவிழா காணும் என்பதில் ஐயமில்லை.