குவைத்தில் நாளை முதல் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் தங்கியுள்ள Bachelors கண்டறியும் சோதனை தீவிரமாக இருக்கும்:
குவைத்தில் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த சில வருடங்களாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் வேலை செய்யும் இளைஞர்கள் வசிக்ககூடாது என்பது சட்டமாகும். இதையும் மீறி பல பகுதிகளில் இளைஞர்கள் வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகிறார்கள்.பல நேரங்களில் மோதல்கள் ஏற்படுவதும் அப்படிப்பட்ட நபர்களை கைது செய்து நாடுகடத்துவம் தொடர்பு நடைபெற்று வருகிறது.
குவைத்தில் வசிக்கும் Bachelors (இளைஞர்கள்) மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளதால் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களை கண்டறியும் சோதனை நடத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

நாளை(ஜூலை-1) முதல் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் தங்கியுள்ள Bachelors(இளைஞர்களை) கண்டறியும் சோதனை நடத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்கள் தங்கியுள்ளது உங்கள் பார்வைக்கு வந்தால் உடனடியாக 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குடும்பத்தினர் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் (6-Governorates) இந்த சோதனை நடத்த முடிவு செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இப்படி Bachelors (இளைஞர்கள்) தங்கியுள்ள குடியுங்களின் மின்சாரம், குடிநீர் போன்ற இணைப்புகள் துண்டிக்கப்பட்டு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படும்,மேலும் குறிப்பிட்ட நாளில் அங்கிருந்த வெளியே வேண்டிய நிலை ஏற்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த சோதனை எப்போதும் போல் இல்லாமல் உள்துறை அமைச்சகம் அதிகாரிகள் (பாதுகாப்பு அதிகாரிகள்), நகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்சார & குடிநீர் வாரிய அதிகாரிகள் அனைவரும் இணைந்து இந்த சோதனையில் ஈடுபடுவார்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team.