குவைத்ன் Jahra பகுதியில் ஒரு வீட்டில் இந்தியாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
அந்த பெண்மணி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த பெண்மணி மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிரச்சினைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மற்றொரு சம்பவம் குவைத்தின் Nugra பகுதியில் நடந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு 32 வயது மதிக்கத்தக்க இந்திய இளைஞர் ஒருவர் அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தகவல் கிடைத்தது விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட தகவல்படி அவர் கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.இதுபோல் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Report by Kuwait tamil pasanga team