BREAKING NEWS
latest

Monday, June 17, 2019

குவைத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது:


குவைத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது:

 குவைத்தில் புதிதாக டெலிவரி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை குவைத் உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க குவைத் வாணிக துறை அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
      டெலிவரி நிறுவனங்களும் புதிய சட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சக தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
            டெலிவரி துறை உள்ளிட்ட பல துறைகளில் புதிய நிறுவனங்கள் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த துறையை சரியான வரையறைக்குள் கொண்டுவருவது மட்டுமே நோக்கம் எனவும், எனவே புதிதாக உரிமங்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் வாணிக துறை அமைச்சகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
          குவைத் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் மட்டுமே இனிமேல் புதிதாக உரிமம் வழங்கப்படும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்வரி துறையை கண்காணிக்க சுங்கத்துறை, சுகாதார துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையை ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
              டெலிவரி துறையில் இயங்கும் நிறுவனங்கள் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாகவும் இதை கட்டுபடுத்த புதிய சட்டங்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
      மேலும் நிறுவனங்கள் நடத்தும் உரிமையாளரின் விசாவில் அல்லாத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் தடைசெய்ய பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்டவை சமீபகாலத்தில் நடந்த சோதனையில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது

Report by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது:

« PREV
NEXT »