BREAKING NEWS
latest

Saturday, June 15, 2019

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெப்பநிலை உச்சமடைந்த நிலையில் தொழிலாளர்களின் மத்திய ஓய்வு நேரங்கள் விபரங்கள்:


குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெப்பநிலை உச்சமடைந்த நிலையில் தொழிலாளர்களின் மத்திய ஓய்வு நேரங்கள் விபரங்கள்:

        குவைத்தில் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெப்பம் உச்சமடைந்த நிலையில் குவைத் அமீரகம் கத்தார் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தொழிலாளர்களுக்கு மத்தியான ஓய்வு நேரம் தொடர்பான சட்டத்தை அமல்படுத்த அறிக்கை வெளியிட்டுள்ளது
         இதன் விபரங்கள் பின்வருமாறு:
அமீரகம்(UAE):
     அமீரகத்தில் இன்று ஜீன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12:30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தொழிலாளர்கள் வெளிப்புறங்களில்
வேலை செய்ய தடை விதித்துள்ளது.இந்த நேரங்களை ஓய்வு நேரங்களாக அறிவித்து அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
              மீறும் நிறுவனங்களுக்கு  5000 திர்ஹம் முதல் 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி(Saudi):
       சவுதியில்  இன்று ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தொழிலாளர்கள் வெளிப்புறங்களில்
வேலை செய்ய தடை விதித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை சவுதி தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
      சட்டம் கடைபிடிக்கப் படுகிறதா என்று சோதனை செய்யவும் குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
          மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார்(Qater)
    கத்தாரில் இன்று ஜீன் 15 முதல் ஆகஸ்ட் 31 வரையில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும்
           இந்த நாட்களில் 11:30 முதல் 3:00 வரையில் தொழிலாளர்கள் வெளிப்புறங்களில் வேலை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சட்டத்தை மீறும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்(Kuwait)
     குவைத்தில் தொழிலாளர்கள் துறை அமைச்சகம் கடந்த ஜீன் 1 முதல் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாள் அதாவது 31 வரையில் 11:00 மணிக்கு பிறகு 5:00 மணி வரையில் வெளிப்புறத்தில் வேலை செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
            குவைத்தில் கடந்த வருங்களை விட இந்த வருடம் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் நிழல் உள்ள இடங்களில் வெப்பநிலை 50°C முதல் 52°C வரையிலும் சூரிய கதிர் நேரடியாக படும் இடங்களில் 60°C முதல் 60°C வரையிலும் நிலம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
                மேலும் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் பகல் நேரத்தில் வெளியே செல்லும் நபர்கள் சூரிய கதிர்கள் நேரடியாக படுவதை தடுக்க தக்க பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி வேண்டும், கடுமையான நிறத்திலும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும், கண்களை பாதுகாக்க(Sun-Glass) கண்ணாடிகள் அணியவேண்டும் என்றும், உணவுகளில் அதிகமான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்

Report by:Kuwait tamil pasanga Team
       

Add your comments to குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வெப்பநிலை உச்சமடைந்த நிலையில் தொழிலாளர்களின் மத்திய ஓய்வு நேரங்கள் விபரங்கள்:

« PREV
NEXT »