குவைத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக முதல் மரணம் என்ற செய்தி வெளியாகியுள்ளது
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த சில தினங்களாக நாளுக்குநாள் கோடைக்கால வெப்பத்தின் அளவு எந்த வருடமும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது வருகிறது.
இந்நிலையில் குவைத்தில் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் Surra பகுதியில் நடந்துச்சென்ற நிலையில் திடிரென மரணமடைந்தார் என்ற தகவலை குவைத் சுகாதார துறைக்கு கிடைத்தது.
இதையடுத்து இவருடைய உடல் கைப்பற்றி மருத்துவ குழுவினர்
நடத்திய சோதனையில் இவர் சூரிய கதிர் தாக்குதல் காரணமாக தான் மரணமடைந்தார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
நேற்று முன்தினம் வளைகுடாவில் அதிகபட்சமாக வெப்பநிலை 52°C பதிவானது என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.