குவைத்தில் கடந்த 1990 களில் ஈராக் படையினர் குவைத்துடன் நடத்திய போரின் போது புதைபட்ட வெடிபொருட்கள், கண்ணிவெடிகள் ஏவுகணை உள்ளிட்டவை பல வெடிபொருட்கள் பல பகுதிகளில் மழை காலத்தில் மணல் பரப்பின் மேற்பகுதியில் தென்படுவதும்,அதே பாதுகாப்பு அதிகாரிகள் செயலிழக்க செய்வதும் வழக்கம்.
பல நேரங்களில் பாலைவனத்தில் ஆடுமெய்கும் வேலை செய்யும் பலர் தெரியாமல் மிதித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு குவைத்தில் பெய்த பலத்த மழைக்கு பிறகு குவைத்தின் பல பகுதிகளில் இப்படிப்பட்ட வெடிபொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குவைத்தின் Abdaly பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு கண்ணிவெடியை செயலிழக்க செய்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு கார் ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.பாலைவன பகுதியில் செல்லும் நபர்கள் யாரும் செல்லாத பாதைகளில் பாலைவனத்தில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.