BREAKING NEWS
latest

Tuesday, June 18, 2019

சவுதியில் மதுபான விற்பனை,நெரலையாக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி போன்ற செய்திகள் தவறானது

சவுதியில் மதுபான விற்பனை,நெரலையாக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி போன்ற செய்திகள் தவறானது:
 சவுதியில் கடந்த இரண்டு தினங்களாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கும் சட்ட நடைமுறைகளுக்கு வருகிறது என்றும்,மேலும் சில செய்தி தளங்கள் அனுமதி வழங்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியிட்டன.
           இதை பல சர்வதேச பத்திரிக்கைகளும் செய்தியாக வெளியிட்டது.இதை சவுதி முற்றிலும் மறுத்துள்ளது.மேலும் மதுபானம் விற்கவோ,பயன்படுத்தவோ அனுமதி வழங்கும் எந்தவொரு திட்டம் ஒருபோதும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது சவுதி சுற்றுலா துறை அமைச்சகம்.
             பொய்யாக பரப்பப்பட்ட செய்தியில் பருவ வயது நிரம்பிய இளைஞர்களுக்கு ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் மதுபானங்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டது என்ற வண்ணத்தில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
             இதுபோல் நேரலை இசை நிகழ்ச்சிகள் நடத்த சவுதி பொழுதுபோக்கு துறை அனுமதி வழங்கியது என்ற செய்தியும் சம்மந்தப்பட்ட துறை மறுத்துள்ளது.இது குறித்த விசாரனைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது
                2030 விஷன் திட்டத்தின் அடிப்படையில் சவுதியில் இளவரசர்
 பல்வேறு திட்டங்கள் நடைமுறை படுத்தினார் எப்படி குறிப்பிடத்தக்கது ‌திரையரங்குகள், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் பெண்கள் சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதி , வெளியுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு உயர் பதவியில் பெண்களுக்கு அனுமதி உள்ளிட்ட
பல மாற்றங்களுக்கு கடந்த  சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Report by Kuwait tamil pasanga team

Add your comments to சவுதியில் மதுபான விற்பனை,நெரலையாக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி போன்ற செய்திகள் தவறானது

« PREV
NEXT »