BREAKING NEWS
latest

Saturday, June 15, 2019

குவைத்தில் உதவுவதற்கு யாருமின்றி பட்டினியால் தாயகம் செல்ல முடியாமல் தவிக்கும் தமிழர் மனைவி மூலம் உதவியை நாடியுள்ளார்:


குவைத்தில் உதவுவதற்கு யாருமின்றி பட்டினியால் தாயகம் செல்ல முடியாமல் தவிக்கும் தமிழர் மனைவி மூலம் உதவியை நாடியுள்ளார்:
குவைத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் தற்போது இந்திய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பசி பட்டினியோடு  தவித்து வருகிறார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. குவைத்தில் உள்ள யாராவது தன்னை இந்திய துாதரக உதவியுடன் மூலம் மீட்க தாயகம் செங உதவவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
       இநதிய தமிழகம் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்த செங்கோல் என்பவரது மகன் யேசுராஜ்(வயது-32) திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 2014-ஆல் நண்பர் ஒருவர் மூலம் குவைத்தில் டிரைவர் வேலைக்கு வந்துள்ளார்.
          குவைத்தில் ஜெல்லையா என்னும் பாலைவனப்பகுதியில் ஆட்டுப் பண்ணைக்கு டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டும் செல்லும் வேலை செய்து வந்தார் என்றும், பாலைவனத்திலேயே பணி என்பதால் குவைத்தின் நகர்ப்புறத்தையே அவர் பார்த்ததில்லை என்று தெரிகிறது.
             2015-ஆல் அவர் டேங்கர் லாரியை ஓட்டிச் செல்லும் போது, பின்னால் வந்த வாகனம் ஒன்று இவரது டேங்கர் மீது மோதி அதில் இருந்த இரு மாணவர்கள் பலியாயினர். இந்த வழக்கில் யேசுராஜ் கைதானார் என்றும், அவர் மீது விபத்து வழக்கு உள்ளது.

            இதையே காரணம் காட்டி, பண்ணை நடத்தும் நபர்(உரிமையாளர்) யேசுராஜை அடிமைபோல நடத்தி வந்தார் எனவும் சொந்த ஊருக்கும் அனுப்ப மறுத்தார் எனவும்,மிக குறைவான சம்பளம் கொடுத்துள்ளார் எனவும்,எனவே தற்போது அவர் அங்கிருந்து தப்பி குவைத் வெளியேறினார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     அவர் கூறுகையில், நான் குவைத்திற்கு வந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது. இப்போதுதான் நகர்ப்புறத்தையே பார்க்கிறேன். டேங்கர் லாரி மீது இன்னொரு வாகனம் மோதிய விபத்தில் என் மீது எந்த தவறும் இல்லை.இருப்பினும் வழக்கை முடிக்காமல் பண்ணை முதலாளி என்னை மிரட்டிவருகிறார்.இதுகுறித்து குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்தேன். மனைவி மேரி, மகள்கள் மரியா, ரோசி ஆகியோர் விழுப்புரம் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
        என் மீதான விபத்து வழக்கை இதற்குள் முடித்திருக்கலாம்.வேண்டு மென்றே என்னை கொடுமைபடுத்துகிறார்கள்.நான் குவைத்திற்கு வந்து ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது.தற்போது தமிழர் ஒருவரின் பாதுகாப்பில் உள்ளேன்.அவரும் சாதாரண வேலை செய்பவர்தான்.எனவே ஒரு நேரம் மட்டுமே உணவு கிடைக்கிறது.என்னை இந்திய துாதரகத்தின் மூலம் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மூலம் மீட்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
          இந்த நபருக்கு குவைத் இந்திய அமைப்புக்கள்,சமூக ஆர்வலர்கள் யாராவது உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
        யேசுராஜின் குவைத் தொடர்பு எண் : +965 95529732

Add your comments to குவைத்தில் உதவுவதற்கு யாருமின்றி பட்டினியால் தாயகம் செல்ல முடியாமல் தவிக்கும் தமிழர் மனைவி மூலம் உதவியை நாடியுள்ளார்:

« PREV
NEXT »