BREAKING NEWS
latest

Tuesday, June 25, 2019

குவைத்தில் தமிழக பணிப்பெண் சித்ரவதை என்றும்;மீட்க உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்:


குவைத்தில் தமிழக பணிப்பெண் சித்ரவதை என்றும்;மீட்க உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்:


குவைத்தில் வீட்டு வேலைக்கு வந்த இந்திய தமிழகத்தைச் சேர்ந்த பெண் கடுமையாக தாக்கப்பட்டதால் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துவ தப்பித்தார். தற்போது கால் உடைந்த நிலையில் குவைத் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கண்ணன், ராணி தம்பதியின் மகள் சுமதி(வயது-32). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சுமதியின் குடும்பத்தினர் அண்மைக் காலமாக கோவையில் வசித்துவந்தனர். மன்னார்குடியை சேர்ந்த ஒரு ஏஜன்சி மூலம் சுமதி கடந்த மே 13ம் தேதி, குவைத்தில் ஒருவரது வீட்டு பணிக்காக வந்தார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

ஆனால் பணியில் சேர்ந்த நாளில் இருந்தே அந்த வீட்டில் தினமும் போதுமான உணவு தரவில்லை. ஓய்வில்லாமல் இரவும் பகலும் வேலைவாங்கியுள்ளனர். தம்மை மீண்டும் இந்தியா அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் வீட்டு உரிமையாளரோ அவரை அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளார். அவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் ஒரு தனியறையில் அடைத்து துன்புறுத்தியுள்ளனர். 

கடந்த மே 17 ம் தேதி ஜன்னல் வழியாக சுமதி குதித்துள்ளார். மூன்று மாடி கட்டடம் என்பதால் அவரது வலதுகால் உடைந்துவிட்டது. அவரை மீட்ட போலீசார் குவைத் ஜிப்ரியாவில் உள்ள முபாரக் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முபாரக் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுமதியின் தாயார் ராணி, கோயம்புத்துார் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.இருப்பினும் இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 இன்றோ, நாளையோ அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட உள்ளார்.படுத்த படுக்கையாக உள்ள அவர் வெளியேற்றப்பட்டால் எவ்வாறு இந்தியா திரும்புவார்.அவருக்கு யார் உதவுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.எனவே தற்போது முபாரக் மருத்துவமனையில் உள்ள சுமதியை சந்தித்து மீட்பு நடவடிக்கையில் இந்திய துாதரக அதிகாரிகள் இறங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த செய்தியை குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் பார்வையில் படும் வரையில் பகிர்வு செய்யவும்.

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத்தில் தமிழக பணிப்பெண் சித்ரவதை என்றும்;மீட்க உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள்:

« PREV
NEXT »