குவைத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள் தங்கள் குடும்பத்துடன் yes பேசுவதற்கு 120 தொலைபேசி இணைப்புகளை அமைக்க உள்துறை அமைச்சக பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஃபர்ராஜ்-அல்-ஜுவாபி வலியுறுத்தினார் என்று அல்-அன்பா தினசரி நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி குவைத் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் குவைத் சிறையில் உள்ள கைதிகள் கைபேசி கடத்தலில் ஈடுபடுவது இதன் மூலம் தவிர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விருந்தினர்கள்,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வருகையின் போது கைதிகளுக்கு கைபேசிகள் மறைமுகமாக எடுத்து வரப்பட்டு வழங்கப்படுகிறது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிறுவப்படும் தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி கைதிகளுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரையில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் செய்தியில் தெரிவித்துள்ளது.
குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்
Reporting by Kuwait tamil pasanga team