BREAKING NEWS
latest

Tuesday, June 18, 2019

குவைத்தில் வளைகுடா நாடுகளில் முதல் குருத்தணு (Stemcell) மருத்துவமனை திறக்கப்பட்டது:


குவைத்தில் வளைகுடா நாடுகளில் முதல் குருத்தணு (Stemcell) மருத்துவமனை திறக்கப்பட்டது:
  • வளைகுடா நாடுகளில் முதல் குருத்தணு சிகிச்சை மருத்துவமனை குவைத்தில் நேற்று திங்கட்கிழமை குவைத் சுகாதார துறை அமைச்சர் Sheikh Basil Al-Sabah திறந்துவைத்தார்.

குவைத் மன்னரின் மகள் பெயர் இந்த மருத்துவமனைக்கு சூட்டப்பட்டுள்ளது.Al-Sabah பகுதியில் திறக்கப்பட்ட இந்த புதிய மருத்துவமனை 12,000 சதுரயடி பரப்பளவு கொண்ட மூன்று மாடி அதிநவீன கட்டிடம் ஆகும்.இந்த மருந்துமனை சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள என்று மருத்துவமனை திறந்துவைத்து அமைச்சர் பேசினார்.
மேலும் குருத்தணு தொடர்பான ஆய்வுகள் நடத்தும் விதத்தில் சர்வதேச தரத்தில் அனைத்து அதிநவீன கருவிகளை கொண்ட ஆய்வு மையத்தின் பிரிவும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவமனையில் ஆய்வு மையம், இரத்த சேமிப்பு கிடங்கு, தொப்புள் கொடி பாதுகாப்பு கிடங்கு,மருத்துவ சம்மந்தப்பட்ட பெரிய நூலகம் மற்றும் வகுப்புகள் நடத்த பெரிய அதிநவீன கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
           இரத்த புற்றுநோய் உள்ளிட்டவை நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்கு இந்த புதிய மருத்துவமனை பெரிதும் உதவும் என்று குவைத் சுகாதார துறை அமைச்சகத்தின் நம்பிக்கை ஆகும்.


Reporting by Kuwait tamil pasanga team




Add your comments to குவைத்தில் வளைகுடா நாடுகளில் முதல் குருத்தணு (Stemcell) மருத்துவமனை திறக்கப்பட்டது:

« PREV
NEXT »