ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வந்து கட்டணமின்றி விசா பெற்றுக் கொள்ளலாம் என்று இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், சொகுசு உணவகங்கள் உட்பட 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 253 பேர் உயிரிழந்தனர்.மேலும் 400க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கொடூர தற்கொலை தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த பயங்கர தாக்குதல் நடந்த அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில்
பேசிய இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா,பாதுகாப்பு கருதி சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும்,இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டுச் சதி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார். இதனால் இலங்கையின் விசா வசதிகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்பதால் குறிப்பிட்ட 39 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சுற்றுலா வருவாய் அந்நாட்டின் முக்கிய வருவாயாக இருப்பதால் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலங்கை அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்தியா,சினா தாய்லாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை சென்ற பிறகு விமான நிலையத்தில் வைத்து இலவசமாக விசா பெற்றுக் கொள்ளும் திட்டத்தைச் மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டது.இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 10-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் மீண்டும் இலங்கை வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை விமான நிலையம் வந்தபிறகு கட்டணமின்றி விசா பெற்றுக் கொள்ளலாம்.
6 மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் இத்திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று இலங்கை சுற்றுலாத்துறை சுற்றுலா துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா அவர்களை மேற்கோள் காட்டி இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.