அமீரக செயற்கைக்கோள் பால்கன்-ஐ1 விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நேற்று காலை 05:53 லோக்கல் நேரப்படி பிரெஞ்சு கயானா விண்வெளி தளத்திலிருந்து இது ஏவப்பட்டது. ராக்கெட்டில் ஏற்பட்ட பழு காரணமாக இது தோல்வியில் முடிந்தது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ராணுவ தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.611 கிலோமீட்டர் தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்த திட்டமிட்ட நிலையில் விண்ணில் பாய்ந்தது 6 நிமிடத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் பால்கன்-ஐ2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
Reporting by Kuwait tamil pasanga team.