அபுதாபியில் குற்றவியல் நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதளம் உருவாக்கிய அதன்மூலம் சமூக வலைதளங்கள் வழியாக தீவிரவாதிகள் குறித்த செய்திகளை பரப்பியது மற்றும் மக்களை தீவிரவாத செயல்கள் செய்வதற்காக ஆதரவு திரட்டியது ஆகிய குற்றங்களுக்காக அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் 9 வருட சிறை தண்டனையும் மற்றும் 20 லட்சம் திர்ஹம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 30-வயது இளைஞருக்கு இந்த தண்டனையை அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும் அந்த நபரின் இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகளை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றத்துக்கு முக்கிய ஆதாரமாக,அந்த நபரிடம் இருந்து கணினி மற்றும் கைபேசி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விசாரணை வேண்டிய விதத்தில் நடைபெறவில்லை என்று குற்றவாளிக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.மேலும் குற்றவாளியாக கூறப்படும் பிலிப்பைன் நபர் செய்ய முடியாத குற்றங்கள் அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் வாதாடினார்.ஆனால் இதை அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்தது.மேலும் நீதிமன்றத்தில் இதுவரையில் நடந்த வழங்கு விசாரணைக்கு செலவு செய்யப்பட்ட பணம் அனைத்தையும் குறிப்பிட்ட நபர் ஏற்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Reporting by Kuwait tamil pasanga team.