குவைத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 400 இந்தியர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன:
குவைத்தில் வேலையின் நிமித்தமாக வந்த இந்தியர்களில் கிட்டத்தட்ட 400 இந்தியர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை குவைத்தின் Al Rai தினசரி நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி பத்திரிக்கைகள் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2007 முதல் 2017 வரையில் 394 இந்தியர்கள் தற்கொலை செய்துள்ளனர்.இதில் 63 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குவைத்தில் பத்து ஆண்டுகளில் இந்திய வெளிநாட்டினர் சமூகத்தின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது என்று இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் அதிகமாக 2016 ஆண்டு தற்கொலை செய்துள்ளனர் 42 இந்திய ஆண்களும் 7 இந்திய பெண்களும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாட்டில் மிகப்பெரிய வெளிநாட்டினர் சமூகம் குவைத்தில் வேலையின் நிமித்தமாக வசித்து வருகிறார்கள்.சுமார் ஒரு மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்(10 லட்சம் பேர்)
ஒட்டுமொத்த குவைத் மக்கள் தொகை 4.8 மில்லியனாக உள்ளது, அவர்களில் 3.4 மில்லியன் பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த குவைத் மக்கள் தொகை 4.8 மில்லியனாக உள்ளது, அவர்களில் 3.4 மில்லியன் பேர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களிடையே அதிக தற்கொலை விகிதம் வளைகுடா நாடுகளில் மட்டுமல்ல
லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு பரந்த ஆய்வில், தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் இந்திய பெண்கள் 36.6 சதவீதம் உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டில் வாழும் 100,000 இந்தியப் பெண்களில் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் ஆண்கள் தற்கொலை வழக்குகளில் 24 சதவீதம் பேர்இந்திய ஆண்கள். இந்தியாவில், ஒவ்வொரு 100,000 ஆண்களுக்கும் (2014) 10.6 ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.கேரளா மாநிலத்தில் தற்கொலை விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது, 100,000 க்கும் 32 பேர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தமிழாக்கம்: Kuwait tamil pasanga team.