BREAKING NEWS
latest

Wednesday, July 24, 2019

குவைத் வங்கிகளில் கேட்பாரற்ற நிலை 10 கோடி தினார்கள் வரையில் குவிந்து கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன:

குவைத் வங்கிகளில் கேட்பாரற்ற நிலை 10 கோடி தினார்கள் வரையில் குவிந்து கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன:


குவைத்திலுள்ள வங்கிகளில் வங்கி கணக்குகள் துவங்கியுள்ள  ஆயிரக்கணக்கான உரிமையாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கணக்குகளில் உள்ள பணத்தை ஒரு தடவை கூட பணமாக  எடுக்கவோ அல்லது வேறு எந்த தேவைக்கும் ஆன்லைன் வழியாகவோ ஒரு தினார் கூட பயன்படுத்தாத நிலையில் 10 கோடி தினார்கள் வரையில் அனாதையாக குவிந்து கிடப்பதாக குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் அல்-ராய் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத்தில் தங்கி வேலை செய்துவந்து பல காரணங்களால் திடிரென்று குவைத்தை  விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரது வங்கி கணக்குகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் முதலீடுகளில் பணத்தை செலுத்திய‌ நபர்களில் பலரது வங்கி கணக்குகள் பல வருடங்களாக பயன்படுத்தாமல்,ஒவ்வொரு வருடமும் பணம் மேலும் குவிந்த வண்ணம் உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.ஆனால் அந்த நபர்கள் குறித்த கூடுதல் தெளிவாக விபரங்கள் வங்கிகளிடம் இல்லை என்று கூறப்படுகிறது.


  • பல வருடங்களாக முயற்சி செய்து சில வங்கி கணக்குகளின் உரிமையாளர்களை வங்கிகள் கண்டறிந்துள்ளனர்.குவைத் சட்டப்படி வங்கி கணக்குகள் துவங்கியுள்ள நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிட கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படிப்பட்ட கணக்குகளின் உரிமையாளர்களை கண்டறிவது சிரமமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


பல வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பழைய வங்கி கணக்குகளில் அதன் உரிமையாளரின் சிவில் ஐடி எண்கள் கூட இல்லை என்று கூறப்படுகிறது.திடிரென்று குவைத்தை  விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரது வங்கி கணக்குகளில் அவர்கள் வேலை செய்த கம்பெனிகள் கடையில் வழங்கும்
இறுதி செட்டில்மென்ட் பயணம் உள்ளிட்டவை கூட எடுப்பதற்கு ஆளில்லாமல் குவிந்து கிடக்கின்றன என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தில் இல்லாத வங்கி கணக்குகள் மீது எடுக்கவேண்டிய இறுதி நடவடிக்கைகள் குறித்து மத்திய வங்கியின் ஒப்புதலுக்கு வங்கிகள் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to குவைத் வங்கிகளில் கேட்பாரற்ற நிலை 10 கோடி தினார்கள் வரையில் குவிந்து கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன:

« PREV
NEXT »