இந்தியாவில் இருந்து இந்தாண்டு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர் என்று இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர், அபுபக்கர் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அபுபக்கர் அளித்த பேட்டி:
2019ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு அதிலிருந்து கூடுதலாக 30 ஆயிரம் பேர் செல்வதற்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு கூடுதலாக 1000 பேர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சவுதி அரசிடம் பேசி 30 ஆயிரம் பேர் கூடுதலாக செல்ல உள்ளனர்.
21 விமான நிலையங்களில் இருந்து சுமார் 500 விமானங்கள் மூலம் இந்தியர்கள் ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வரும் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மேற்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.