BREAKING NEWS
latest

Thursday, July 11, 2019

இந்தியாவில் தட்கல் இல்லாமல் சாதாரண முறையில் 11 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் மத்திய இணையமைச்சர் அறிவிப்பு:


இந்தியாவில் தட்கல் இல்லாமல் சாதாரண முறையில் 11 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் மத்திய இணையமைச்சர் அறிவிப்பு:

பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளீதரன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பம் செய்த 11 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய வெளிறவு இணை அமைச்சர் வி. முரளிதரன் பாஸ்போர்ட் தொடர்பான கேள்வியை காங்கிரஸ் கட்சியின் மனிஷ் திவாரி எழுப்பினார்.

நாடு முழுவதும் 36 பாஸ்போர்ட் அலுவலகங்கள் 93 பாஸ்போர்ட் சேவை மையங்கள் 412 போஸ்ட் ஆபிஸ் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பாஸ்போர்ட் பெறுவதில் மக்கள் சிரமம் ஏன் அடைகின்றனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி கேள்வி எழுப்பினார்.

இதற்கு வெளியுறவு இணையமைச்சர் வி. முரளிதரன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது -

தட்கலில் விண்ணப்பித்தால் ஒரே நாளில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.சாதாரண முறையில் 11 நாட்களில் பாஸ்போர்ட் வாங்கப்படுகிறது. 731 மாவட்டங்களில் போலீஸ் உறுதிப்பாடு சோதனைக்காக ஆப் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தும்போது முறைகேடுகள், கால தாமதம் உள்ளிட்டவை தவிர்க்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


Add your comments to இந்தியாவில் தட்கல் இல்லாமல் சாதாரண முறையில் 11 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் மத்திய இணையமைச்சர் அறிவிப்பு:

« PREV
NEXT »