குவைத்தில் கடந்த 11 மாதங்களாக ஒரு வீட்டில் வேலை செய்துவந்த இந்திய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி வீணா ஆதாரங்களின்படி, அவர் அவர் வேலை செய்யும் இடத்தில் அவர் துன்புறுத்தப்பட்டார் மற்றும் வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு, வீணாவின் கணவரும் மாரடைப்பால் இறந்தார்.இந்நிலையிலும் அந்த பெண்மணியை அவருடைய முதலாளி
இந்தியாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை.
இந்தியாவில், வீணாவின் மகன் தனது தாயார் திரும்ப தாயகம் அழைத்துவர கோரி பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்.இந்நிலையில் யாரோ ஒருவர் மூலம் குவைத்தில் இயங்கும் பஞ்சாப் சமூக வலைதள அமைப்பான சிங் மீடியாவுடன் தொலைபேசியில் பேசி தன்னுடைய தாயின் நிலையை எடுத்துரைத்தார்.
இதையடுத்து இந்திய தூதரகம் மற்றும் குவைத் உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அந்த பெண்மணி மீட்கப்பட்டு குவைத்தில் உள்ள பஞ்சாப் அமைப்பை சேர்ந்தவர்களால் நேற்று முன்தினம் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைத்தனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அமைப்பைப் சேர்ந்தவர்கள் பலர் அந்த பெண்மணியை தாயகம் அனுப்பிவைக்க குவைத்விமானம் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.